ஸ்வீட்டி நாட்டி கிரேஸி: “இன்னொரு, ‘உள்ளத்தை அள்ளித்தா’!”: ஹீரோ த்ரிகுண்!

ஸ்வீட்டி நாட்டி கிரேஸி: “இன்னொரு, ‘உள்ளத்தை அள்ளித்தா’!”: ஹீரோ த்ரிகுண்!

Arun Visualz என்ற புதிய பட நிறுவனம் சார்பில் V. M.R.ரமேஷ், R. அருண் இருவரும் இணைந்து தயாரிக்க, அறிமுக இயக்குநர் G. ராஜசேகர் இயக்கத்தில் , த்ரிகுண் மற்றும் ஸ்ரீ ஜீத்தா கோஷ், இனியா, சுந்தரா டிராவல்ஸ் ராதா ஆகியோர் நடிப்பில் உருவாகியுள்ள ரொமான்ஸ் காமெடி திரைப்படம், ஸ்வீட்டி நாட்டி கிரேஸி.

தமிழ் தெலுங்கு என இரு மொழிகளில் இப்படம் விரைவில் வெளிவரவுள்ள நிலையில், இப்படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு, படக்குழுவினர் கலந்துகொள்ளப் பத்திரிக்கை, ஊடக நண்பர்கள் முன்னிலையில் நடைபெற்றது.இந்நிகழ்வில் இயக்குநர் ஜி. ராஜசேகர்,  இசையமைப்பாளர் அருணகிரி, ஒளிப்பதிவாளர் C. விஜய ஸ்ரீ,  சுந்தரா டிராவல்ஸ் ராதா,  நடன இயக்குநர் ராதிகா, ஸ்ரீ ஜீத்தா கோஷ், நடிகை இனியா, தயாரிப்பாளர் அருண்  உள்ளிட்டோர் பேசினார்கள்.

நாயகன் த்ரிகுண் பேசும்போது, “. எனக்கு ஊர் கோயம்புத்தூர் தான், ஜர்னலிசம் படிச்சேன், பிரகாஷ் ராஜ் கண்ணில் பட்டு, இனிது இனிது படம் செய்தேன். காலேஜ் படிக்கும் போதே ஹீரோ ஆகிவிட்டேன். சமீபத்தில் மிஷ்கின் சார் இசையமைத்த டெவில் படத்தில் நடித்தது மகிழ்ச்சி. நான் தெலுங்கில் பல படங்கள் செய்திருந்தாலும் இங்கு பார்ப்பவர்கள் என்ன படம் செய்துள்ளாய் எனக் கேட்கும் போது, வருத்தமாக இருக்கும், அதனால் தமிழில் படம் செய்ய வேண்டும் என நினைத்தேன்.

அந்த நேரத்தில் தான் ராஜசேகர் சார் கதை சொன்னார். அவர் தயங்கி தயங்கி கதை சொன்னார், இப்போதைய கால கட்டத்தில் ஒன்று அழ வைக்க வேண்டும், இல்லை சிரிக்க வைக்க வேண்டும், இப்போது நான் சீரியஸ் படங்கள் தான் செய்து வருகிறேன், அதனால் கண்டிப்பாக இந்தப்படம் செய்யலாம் என சொன்னேன்.இப்படத்திற்காக ஈசிஆரில் பாடல் ஷீட் செய்தோம் அதே இடத்தில் ஜூனியர் ஆர்டிஸ்டாக நடித்துள்ளேன், இப்போது ஹீரோவாக நடித்தது மகிழ்ச்சி. இப்படத்தில் விஜய் ஶ்ரீ மேடம் செம்ம சூப்பராக வேலை பார்த்துள்ளார், அவருக்கு நன்றி. ராஜசேகர் சார் மிக கடினமான உழைப்பாளி, இப்படம் கண்டிப்பாகப் பேசப்படும் படமாக இருக்கும். எங்கள் படத்தில் மூன்று கதாநாயகிகள், அனுபவம் வாய்ந்தவர்கள் என்னுடன் இணைந்து நடித்ததற்கு நன்றி. இந்தப்படம் எல்லோருக்கும் கண்டிப்பாகப் பிடிக்கும் ஜாலியான படமாக இருக்கும் நன்றி” என்றார்.

பின்னர் பத்திரிக்கையாளர்களுடன் நடந்த உரையாடலில், ” த்ரிகுன் தமிழில் எமி ஜாக்சனுக்கு புருஷனாக நடித்தது, நீங்கள் மட்டும் தான் அதை ஏன் சொல்ல மாட்டேன் என்கிறீர்கள் என கேட்கிறீர்கள். ஆம் நடித்துள்ளேன் ஆனால் அதெல்லாம் பெருமை இல்லையே, அப்போது நடித்தேன், அவர் பெரிய நடிகை மகிழ்ச்சி தான், அதைத் தாண்டி எனக்கு என ஒரு பெயரை ஏற்படுத்த வேண்டுமென நினைக்கிறேன். தெலுங்கைப் போல தமிழிலும் வளர வேண்டும்.மூன்று ஹீரோயின்கள் ஈகோ சண்டை ஏதும் வரவில்லையா என்றால்..  அதைத் தான் சார் படமாக எடுத்திருக்கிறோம், மூன்று பெண்களிடம் மாட்டும் ஹீரோ படாதபாடு படுவதுதான் கதை, மற்றபடி இவர்கள் எல்லோரும் இனிமையானவர்கள்.

இது அடல்ட் காமெடி படம்.  படத்துக்கு தமிழில் பெயர் வைக்க முடிாததற்குக் காரணம்… தெலுங்கிலும் இப்படம் உருவாவதுதான். இரண்டுக்கும் பொதுவாக ஆங்கிலத்தில் வைத்தோம்  ” என்றார்.

 

Related Posts