சன் NXT-இல் விமல் – நட்டி காம்போவில் மிரட்டும் ‘வடம்’!

சன் NXT-இல் விமல் – நட்டி காம்போவில் மிரட்டும் ‘வடம்’!

வெறுமனே படம் பார்த்துவிட்டுப் போவது ஒரு வகை; ஆனால், அந்தப் படத்திற்குள்ளேயே நம்மை இழுத்துக்கொண்டு போய், ரத்தமும் சதையுமான உணர்வுகளோடு கட்டிப்போடுவது தனி வகை! அப்படி ஒரு மஞ்சு விரட்டு மேஜிக் தான் இப்போது சன் NXT-இல் ஸ்ட்ரீமிங் ஆகிக்கொண்டிருக்கும் ‘வடம்’. இந்தக் கதையின் உண்மையான ‘ரியல் ஹீரோ’ ஒரு ஒற்றைக்கண் காளை – அதுதான் பாண்டிமுனி. இறைச்சிக்காக அறுக்கப்படவிருந்த நிலையிலிருந்து, எதற்கும் அடங்காத ஒரு சாம்பியன் காளையாக அது உருவெடுக்கும் பயணம் சும்மா அதிரடியாகக் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. வெற்றி என்கிற கதாபாத்திரத்தால் தத்தெடுக்கப்பட்டு வளர்க்கப்படும் பாண்டிமுனி, வெறும் விலங்கு அல்ல; அது ஒரு மண்ணின் பெருமை, பாரம்பரியத்தின் அடையாளம். பலப்பரீட்சை நடக்கும் களங்களில் தடைகளைத் தகர்த்து, மரியாதையைத் தட்டித் தூக்கும் பாண்டிமுனி, ஒரு ‘அண்டர்டாக்’ வெற்றிக் கதையின் உச்சமாகத் திகழ்கிறது.

இயக்குநர் கேந்திரன் இயக்கத்தில், விமல், நட்டி, பாலசரவணன், சனஷ்கா ஸ்ரீ எனப் பெரிய பட்டாளமே மஞ்சு விரட்டு களத்தில் வியர்க்க விறுவிறுக்க உழைத்திருக்கிறார்கள். பாண்டிமுனியுடன் பழகியது நடிப்பு கிடையாது, அது ஒரு வாழ்நாள் அனுபவம் என்றும், படப்பிடிப்பு முடிந்தபோது நிஜமாகவே கண்கள் கலங்கிவிட்டன என்றும் நடிகர் விமல் நெகிழ்ச்சியுடன் பகிர்ந்துள்ளார். நமது மண்ணின் அடையாளத்தைப் பேசும் இந்தப் படம் சன் NXT மூலம் உலகம் முழுக்கச் சென்றடைவது மகிழ்ச்சி அளிப்பதாக நடிகர் நட்டி தெரிவித்துள்ளார். அந்தத் தூசு பறக்கும் காளைகளின் வேகம், களத்தின் பரபரப்பு என எல்லாவற்றையும் தன் இசையால் நம் காதுகளுக்குள் கடத்தியிருக்கிறார் இசையமைப்பாளர் டி. இமான்.

இது வெறும் மஞ்சு விரட்டு பற்றிய படம் மட்டுமல்ல; மனிதனுக்கும் காளைக்கும் இடையேயான பிரிக்க முடியாத பந்தம், நம்பிக்கை மற்றும் வீரம் பற்றிய உணர்ச்சிகரமான பதிவு. உண்மைக்கு நெருக்கமான திரைக்கடை, மண் வாசனை மாறாத காட்சிகள் என ‘வடம்’ ஒரு முழுமையான சினிமா அனுபவத்தைத் தருகிறது. 4000-க்கும் மேற்பட்ட படங்கள், 44 லைவ் டிவி சேனல்கள் எனத் தென்னிந்தியாவின் பொழுதுபோக்குச் சுரங்கமாக இருக்கும் சன் NXT-இல் இப்போது பிரத்யேகமாக ‘வடம்’ வெளியாகியுள்ளது. பரபரப்பான மஞ்சு விரட்டு அனுபவத்தைப் பெற, இப்போதே சன் NXT-இல் பாண்டிமுனியின் பாய்ச்சலைக் காணுங்கள்! எங்கேயும்… எப்போதும்!

Related Posts