நடிகை ஸ்ரீப்ரியா வழக்கு: மோகன்லாலின் ‘திரிஷ்யம் 3’ (தெலுங்கு)க்கு தடை!
மலையாளத்துல மோகன்லால், மீனா நடிச்சு, ஜீத்து ஜோசப் இயக்கின ‘திரிஷ்யம் 3’ படத்தோட தெலுங்கு ரீமேக் உரிமைகளை வச்சிருக்கிறது நம்ம ஸ்ரீப்ரியா – ராஜ்குமார் தம்பதியோட ‘ராஜ்குமார் தியேட்டர்ஸ்’ நிறுவனம் தான். தங்களோட இந்த அக்மார்க் உரிமையை காப்பாத்த அவங்க கோர்ட்டுப்பக்கம் போயிருக்காங்க.
ஆசிர்வாத் சினிமாஸ், இயக்குநர் ஜீத்து ஜோசப், பனோரமா ஸ்டுடியோஸ், பென் ஸ்டுடியோஸ்னு யாரும் ‘திரிஷ்யம் 3’ படத்தை தெலுங்குல மறுஆக்கம் செய்யவோ, ரிலீஸ் செய்யவோ கூடாதுனு சென்னை உயர் நீதிமன்றத்துல வழக்கு தொடர்ந்தாங்க. கடந்த மாசம் சீனியர் வக்கீல் கே. ரவி வாதாடுனதை கேட்டு, மத்தவங்களுக்கு நோட்டீஸ் அனுப்புன கோர்ட், இப்போ தெலுங்கு ஓடிடி (OTT) ரிலீசுக்கு அதிரடியா இடைக்காலத் தடை விதிச்சிருக்கு!
இதப்பத்தி ராஜ்குமார் தியேட்டர்ஸ் தரப்பு, “வழக்கு முடியுற வரைக்கும் இந்த தெலுங்கு ரைட்ஸ் விஷயத்துல யாராச்சும் அக்ரிமெண்ட் போட்டா அது அவங்க சொந்த ரிஸ்க் தான்” அப்படின்னு ஓப்பனா கெத்து காட்டியிருக்காங்க!

