சொட்ட சொட்ட நனையுது: திரை விமர்சனம்

சொட்ட சொட்ட நனையுது: திரை விமர்சனம்

Adler Entertainment தயாரிப்பில், அறிமுக இயக்குநர் நவீத் s ஃபரீத் இயக்கத்தில், நிஷாந்த் ரூஷோ, வர்ஷிணி, ஷாலினி நடிப்பில், இன்றைய தலைமுறையின் கதையில், கலக்கலான காமெடி எண்டர்டெயினராக உருவாகியுள்ள திரைப்படம் ’சொட்ட சொட்ட நனையுது

விமர்சனம்:

இளமை, (ஓரளவு) வசதி என திருமணத்துக்கான அத்தனை தகுதி இருந்தும்… ஒரே ஒரு விசயத்தால் தடை ஏற்பட்டு, பிரம்மச்சாரியாக அல்லல்படும் இளைஞனின் கதை.

பண்ணை பரமசிவம்,  லட்சுமி  ஆகியோரின் மகன் ராஜா.  ஒரு தவறான விளம்பரத்தை நம்பியதால், இருந்த முடியையும் இழந்து நிற்கிறார்.  இதையும் மீறி பிரியா, என்ற எதிர் வீட்டு பெண்ணுடன் திருமணம் நடக்கும் நேரம்…  ன் நண்பன் ராக்கியால் ஒரு வீடியோ அனுப்ப.. அதை காரணமாக வைத்து திருமணத்தை நிறுத்தி விடுகிறார்.

அதன் பிறகு சென்னை சென்று தன் தலை முடியை சரி செய்து கொண்டு வருகிறார்.   இன்ஸ்டாகிராமில் டிரண்டாகி இருக்கும்
ஸ்ருதியுடன், திருமணம் நிச்சயிக்கப்படுகிறத.

ஆனால் அந்தத் திருமணத்தை நிறுத்த நாயகனின் நண்பர்கள் திட்டமிடுகின்றனர். ஏன் அப்படி செய்கிறார்கள், அவர்கள் நினைத்தது நடந்தாதா என்பதுதான் சுவாரஸ்யமான மீதிக்கதை.நாயகன் நிஷாந்த் ரூஷோ இயல்பாக நடித்து இருக்கிறார். தலை வழுக்கையான சோகத்தை சிறப்பாக வெளிப்படுத்தி இருக்கிறார். குறிப்பாக  இளம் வயதில் தலையில் சொட்டை விழும் நாயகனாக நடித்துள்ளது பாராட்டத்தக்கது.  படம் முழுவதையும் தனது வழுக்கைத் தலையில்..  ஸாரி.. தோளில் சுமக்கிறார்.

எதிர்வீட்டு நாயகியாக வரும் ஷாலினியும் சிறப்பாக நடித்து இருக்கிறார்.  தனது காதலை நாயகன் மறுக்கும்போது வெளிப்படுத்தும் சோகம், பிறகு  நாயகன் மீண்டும் வரும்போது காட்டும் ஆத்திரம் என அற்புதமான நடிப்பு.

இன்ஸ்டா ரீல்ஸ் ப்ரியையாக வரும் வர்ஷினி வெங்கட், அழகாக இருக்கிறார்.. அதோடு நன்றாகவும் நடித்து இருக்கிறார். சோசியல் மீடியா மீதான மோகத்தை அப்படியே வெளிப்படுத்தி உள்ளார்.

ராஜா இளங்கோவன், ஆனந்த் பாண்டி, வணங்காமுடி என்ற டாக்டர் வேடத்தில் கலக்கி இருக்கிறார் மற்றும் ரோபோ சங்கர் ,இவர்கள் வரும் காட்சிகளில் கலகலப்பு நிரம்பி வழிகிறது.

கலகலப்பாக வசனம் எழுதி இருக்கிறார், கலக்கப் போவது யாரு’ புகழ் ராஜா. படத்தில் காமெடியாக நடித்தும் ரசிக்க வைக்கிறார்.

ரஞ்சித் உன்னியின்,  இசையில் உயிரே, என்ற சோகப் பாடலும், இன்ஸ்டாகிராம் பெண்ணே ,என்ற பாடல் ஓரக்கண்ணாலே, என்ற பாடலும் ஈர்க்கிறது. பின்னணி இசையிலும் கவர்கிறார்.

ரயீஷ், ஒளிப்பதிவு  படத்துக்கு பலம்.

ராம் சதீஷ், படத்தொகுப்பு கச்சிதம்.

நவீத்.எஸ். பரித், தனது இயக்கத்தில் இளமைத்துள்ளை மட்டுமின்றி, முக்கியமான விசயத்தை.. தன்னம்பிக்கையை விதைத்து உள்ளார். பாராட்டுகள்..

மொத்தத்தில் அனைவரும் பார்க்கலாம்…!

Related Posts