சிவகார்த்திகேயனின் ‘பராசக்தி’… 3-வது சிங்கிள் புரொமோ வீடியோ 

சிவகார்த்திகேயனின் ‘பராசக்தி’… 3-வது சிங்கிள் புரொமோ வீடியோ 

”நமக்கான காலம்” – ”பராசக்தி” படத்தின் மூன்றாவது பாடலின் புரொமோ வெளியானது..!
சிவகார்த்திகேயன் – சுதா கொங்கரா கூட்டணியில் உருவாகியுள்ள ’பராசக்தி’ திரைப்படத்தின் மூன்றாவது பாடலின் புரொமோ வெளியாகியுள்ளது.

நடிகர் சிவகார்த்திகேயன் – சுதா கொங்கரா கூட்டணியில் உருவாகியுள்ள திரைப்படம் ’பராசக்தி’. ரவி மோகன், அதர்வா முரளி மற்றும் தெலுங்கு நடிகை ஸ்ரீ லீலா ஆகியோர் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். டான் பிக்சர்ஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு ஜி.வி. பிராகாஷ் குமார் இசையமைத்துள்ளார். இப்படம் 2026 பொங்கலை முன்னிட்டு வெளியாக உள்ளது.

ஜி.வி. பிராகாஷ் இசையில் பராசக்தி படத்திலிருந்து இதுவரை வெளியான ’அடி அலையே’, ’ரத்னமாலா’ ஆகிய பாடல்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த நிலையில் தற்போது பராசக்தி திரைப்படத்தின் மூன்றாவது பாடலின் புரொமோ வெளியாகியுள்ளது. ’நமக்கான காலம்’ என்று பெயர் வைக்கப்பட்டுள்ள இப்பாடல் டிசம்பர் 14 ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

 

https://www.youtube.com/watch?v=zDrQ2QdaqeQ&list=RDzDrQ2QdaqeQ&start_radio=1

Related Posts