’சட்டம் ஒரு வகுப்பறை’ : புதுயுகம் டிவி 130 நாட்களைக் கடந்து சாதனை!

’சட்டம் ஒரு வகுப்பறை’ : புதுயுகம் டிவி 130 நாட்களைக் கடந்து சாதனை!

‘சட்டம் ஒரு இருட்டறை; அதில் வக்கீலின் வாதம் ஒரு விளக்கு!’ என்பது பேரறிஞர் அண்ணா அவர்களால் கூறப்பட்ட புகழ்பெற்ற வாசகம்.

‘சட்டம் என்பது சாமானியர்களுக்கு இருட்டறை போல,  புரிந்துகொள்ள கடினமானது.. வழக்குரைஞரின் வாதம் ஒரு விளக்கைப்போல மக்களுக்கு இருட்டை விலக்க உதவும்’ என்பதே அதன் அர்த்தம்.

பாதிக்கப்படும்போதுதான் ஒருவர் சட்டம் குறித்து ஓரளவேனும் அறிந்துகொள்ள முனைகிறார்.  ஆனால் அனைவருக்கும் எளிய முறையில் சட்டத்தை விளக்கும், சிறப்பான நிகழ்ச்சி, ‘சட்டம் ஒரு வகுப்பறை’!ஆமாம்… மெத்தப் படித்த பலரும்கூட, சட்டத்தின் நுனி அளவும் அறியாத நிலைதான். அதைப் போக்க, சட்டங்கள் குறித்த விழிப்புணர்வை பொதுமக்களிடம் ஏற்படுத்தும் நிகழ்ச்சி இது. இரு வழக்கறிஞர்கள் சட்டம் குறித்து விளக்குவதுடன், நேயர்களின் கேள்விகளுக்கும் பதில் தந்து விழிப்புணர்வு ஏற்படுத்துகிறார்கள்.

திங்கள் முதல் வெள்ளி வரை இரவு எட்டு மணிக்கு,  இந்நிகழ்ச்சி ஒளிபரப்பாகிறது.

இதில்  குடும்பம், சொத்து, காப்பீடு நலன், நுகர்வோர் பாதுகாப்பு, பெண்கள் பாதுகாப்பு, வேலைத்தள உரிமைகள், காவல் துறை சேவைகள், அரசு சேவைகள், மோசடி, சைபர் குற்றங்கள் போன்ற பல்வேறு தலைப்புகளில் மக்களுக்குத் தேவையான சட்ட விளக்கங்களை வழங்கப்படுகிறது.அனுபவமுள்ள உச்சநீதிமன்ற மற்றும் உயர்நீதிமன்ற வழக்கறிஞர்கள் கலந்துகொண்டு ஒவ்வொரு தலைப்பையும் தெளிவாக விளக்குகின்றனர். இதுவரை ஐம்பதுக்கும் மேற்பட்ட சட்ட நிபுணர்கள் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்று மக்களின் சந்தேகங்களுக்கு விளக்கமளித்துள்ளனர்.

இந்நிகழ்ச்சியை  செய்தியாளர் வினோத்குமார் தயாரித்து வழங்குகிறார்.

சட்டம் ஒரு வகுப்பறை நிகழ்ச்சி 130 நாட்களை கடந்து வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வருகிறது.

Related Posts