’சிக்னல் அட் 11.30’ : நள்ளிரவு சிக்னலில் ஒரு நடுக்கம்: சந்தோஷ் பிரதாப்பின் அதிரடி ஆட்டம்!

’சிக்னல் அட் 11.30’ : நள்ளிரவு சிக்னலில் ஒரு நடுக்கம்: சந்தோஷ் பிரதாப்பின் அதிரடி ஆட்டம்!

‘காலம் யாருக்காகவும் காத்திருக்காது’ – இந்த ஒற்றை வரியை தாரக மந்திரமாக வைத்துக்கொண்டு, தமிழ் சினிமாவில் ஒரு விறுவிறுப்பான த்ரில்லர் பயணத்தைத் தொடங்கியிருக்கிறார் அறிமுக இயக்குநர் மலர்விழி நடேசன். அலர் ஸ்டூடியோஸ் தயாரிப்பில் உருவாகியிருக்கும் ’சிக்னல் அட் 11.30’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் இப்போது இணையத்தில் செம வைரல்!

சரியாக இரவு 11:30 மணி… அந்த ஒரு சிக்னல்… அங்கே மாறும் ஒரு மனிதனின் வாழ்க்கை! இதுதான் படத்தின் ஒன்லைன். எதார்த்தமான நடிப்பால் ரசிகர்களைக் கவர்ந்து வரும் சந்தோஷ் பிரதாப், இதில் படு தீவிரமான ஒரு கேரக்டரில் மிரட்டியிருக்கிறார். அவருக்கு ஜோடியாக பவ்யா திரிகா மற்றும் பூஜிதா பொன்னாடா நடிக்க, அனுபவ நடிகர்கள் ஜெயப்பிரகாஷ் மற்றும் முனீஷ்காந்த் ஆகியோர் கதைக்கு வலு சேர்த்துள்ளனர்.

டி. இமானின் இசை இந்தப் படத்தின் ஆன்மாவாக மாறியிருக்கிறது என்றால் அது மிகையல்ல. ராஜா பட்டாசார்ஜியின் கேமரா கோணங்களும், கலைவாணனின் கத்தரிக்கோலும் சேர்ந்து ஒரு தரமான த்ரில்லர் அனுபவத்தைத் தரப்போவது உறுதி.

சென்னையில் உள்ள ஒரு பிரபல கல்லூரியில் மாணவர்களின் ஆரவாரத்தோடு வெளியான இந்த ஃபர்ஸ்ட் லுக், படத்தின் மீதான எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ளது. அந்த சிக்னலில் அப்படி என்னதான் நடந்தது என்பதைத் திரையில் காண நாமும் காத்திருப்போம்!

Related Posts