‘நீ சூப்பர் ஸ்டாரா?”: சந்தானத்தை அதட்டிய ரஜினி!

‘நீ சூப்பர் ஸ்டாரா?”: சந்தானத்தை அதட்டிய ரஜினி!

நடிகர் ஆர்யா தயாரிக்க, எஸ்.பிரேம் ஆனந்த் இயக்கத்தில் சந்தானம் நாயகனாக நடிக்கும் படம், டி.டி. நெக்ஸ்ட் லெவல். ( டெவில்ஸ் டபுள் நெக்ஸ் லெவல்.) கீதிகா நாயகியாக நடிக்க, தில் சந்தானம், கீதிகா, செல்வராகவன், கௌதம் வாசுதேவ் மேனன், நிழல்கள் ரவி, கஸ்தூரி, ரெடின் கிங்ஸ்லி, யாஷிகா ஆனந்த், மொட்டை ராஜேந்திரன் மற்றும் மாறன் ஆகியோர் நடித்திருக்கிறார்கள்.

தீபக் குமார் பதே ஒளிப்பதிவு செய்ய, ஆஃப்ரோ இசையமைத்திருக்கிறார்.

நகைச்சுவை திகில் திரைப்படமாக தயாராகி இருக்கும் இப்படத்தை, மற்றும் நடிகர் ஆர்யாவின் ‘தி ஷோ பீப்பிள்’ மற்றும் நிஹாரிகா என்டர்டெய்ன்மென்ட் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கின்றன.

இப்படத்தின் பாடல்கள் மற்றும் முன்னோட்டமும் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்று வருகின்றன.

வரும் 16ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகும் இப்படத்தின் செய்தியாளர் சந்திப்பு இன்று சென்னையில் நடைபெற்றது.நிகழ்வில் பேசிய பட நாயகன் சந்தானம், “மறைந்த எழுத்தாளர் இந்திரா சவுந்திரராஜன், தில்லுக்கு துட்டு 1, 2, டிடி ரிட்டன்ஸ் ஆகிய படங்களின் ஸ்கிரிப்டில் குருவாக இருந்து உதவி செய்தார்.அவரது ஆன்மா எங்களுக்கு வாழ்த்து தெரிவித்து உடன் நிற்கும். அவருக்கு வணக்கங்கள்.

இங்கே சிம்பு வந்திருக்கிறஆர். அவர் இல்லை என்றால் நான் இல்லை. மன்மதன் படத்தில், நான் அறிமுகமாகும் காட்சி மிகச் சிறப்பாக வர வேண்டும், எனக்கு பெயர் கிடைக்க வேண்டும் என மெனக்கெட்டார். இது குறித்து டிஸ்கஸ் செய்தோம்.அந்த சீனில் அவன் என் பெயரைக் கேட்பார். நான், மூன்று முறை பாபி பாபி பாபி என சொல்லி என்ட்டர் ஆவேன்.

அப்போது என் மீது எந்த அளவுக்கு அக்கறை வைத்திருந்தாரோ… அதே அக்கறை இன்றும் வைத்து இருக்கிறார்.

ஆர்யா உயிர் நண்பன். கல்லூரியின் கதை படத்தில் இருந்து நாங்க ப்ரண்ட்ஸ். அப்பவே என்னை, காமெடி சூப்பர் ஸ்டார் என்று சொல்வான். பிறகு சேட்டை படத்தில் டைட்டில்லயே, “காமெடி சூப்பர் ஸ்டார்” என்று என் பெயருக்கு முன்னால் போட்டுட்டான்.

அடுத்து நான் ரஜினி சாருடன்,லிங்காவில் நடிக்கும்போது.. “நீங்க காமெடி சூப்பர் ஸ்டாரா..” என்று அவர் கேட்டார்.

நான் பயந்துட்டேன். உடனே, “ஆர்யாதான் வைச்சாரு” என்றேன்.

அதுக்கு ரஜினி, “நீங்க சொல்லாலமலா வச்சிருப்பார்” என்றார். இப்படி பெரிய லெவல்ல மாட்டிவிட்டான் ஆர்யா” என்று பேசினார் சந்தானம்.

Related Posts