‘தீயோர் கூடம்’: மர்மக் கொலை… சாக்ஷி மிரட்டும் அதிரடி த்ரில்லர் ஃபர்ஸ்ட் லுக்!

‘தீயோர் கூடம்’: மர்மக் கொலை…  சாக்ஷி மிரட்டும் அதிரடி த்ரில்லர் ஃபர்ஸ்ட் லுக்!

ஒரே ஒரு வீடு, திடீரென அரங்கேறும் ஒரு கொலை, அந்த விபரீதத்தில் சிக்கிக்கொள்ளும் மூன்று நபர்கள்! இந்தப் பரபரப்பான சூழலை மையமாக வைத்து, ஒரே நாளில் நடக்கும் கதையாக மிரட்ட வருகிறது ‘தீயோர் கூடம்’. ரூல் பிரேக்கர்ஸ் புரொடக்ஷன் மற்றும் தியா சினி கிரியேஷன்ஸ் தயாரிப்பில், சக்திவேல் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த க்ரைம் திரில்லர் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை ‘தேனிசைத் தென்றல்’ தேவா தற்போது வெளியிட்டுள்ளார்.இந்த போஸ்டரில் சாக்ஷி அகர்வால் முன்னிலையில் இருக்க, உடைந்த கண்ணாடிகளுக்குள் டேனியல் ஆனி போப் மற்றும் வையாபுரியின் முகங்கள் தெறித்துத் தெரிவது படத்தைப் பற்றிய எதிர்பார்ப்பை எகிற வைக்கிறது. சாம்ஸ், சம்யுதா உள்ளிட்ட நட்சத்திரப் பட்டாளமே இதில் கைகோர்த்துள்ளது. வசந்த் இசைப்பேட்டையின் இசையும் பிரசாத்தின் ஒளிப்பதிவும் படத்தின் விறுவிறுப்பிற்கு வலு சேர்க்கின்றன. மர்மமும் விசாரணையும் நிறைந்த ஒரு குழப்பமான சூழலில் இருந்து இவர்கள் எப்படி மீளப் போகிறார்கள் என்பதை விறுவிறுப்பான திரைக்கதையில் சொல்லியிருக்கிறது படக்குழு. தற்போது பின்னணி வேலைகள் படுவேகமாக நடந்து வரும் நிலையில், அடுத்தடுத்த அப்டேட்கள் விரைவில் வெளியாகி ரசிகர்களை அதிர வைக்கக் காத்திருக்கின்றன.

Related Posts