சைதை துரைசாமியின் மனிதநேயம் இலவச ஐ.ஏ.எஸ். கல்வி மையம் தொடர் சாதனை: இங்கு படித்த 31 பேர் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். உள்ளிட்ட பதவிகளில் நியமனம்!

மனிதநேய பயிற்சி மையத்தில் படித்த 31 பேர் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். உள்ளிட்ட சிவில் சர்வீசஸ் பதவிகளில் நியமனம் செய்யப்பட்டிருப்தாக மனிதநேய அறக்கட்டளை தலைவர் சைதை துரைசாமி தெரிவித்து இருக்கிறார்.
மனிதநேயம் ;ஐ.ஏ.எஸ் கட்டன மில்லா கல்வியகம் மூலம் தமிழ்நாட்டை சேர்ந்த அனைத்து தரப்பினரும், ஐ.ஏ.எஸ்,ஐ.பி.எஸ் ஐ.ஆர்.எஸ் இந்திய வனத்துறைபோன்ற சிவில் சர்வீசஸ் பதவிகளுக்கும் டி.என்.பி.எஸ்.சி. நடத்தும் குரூப்-1,2,4ஏ உள்ளிட்ட பதவிகளுக்கும் தேர்வாக வேண்டும் என்ற நோக்கத்தில் இலவச பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.
அதன் படி மனிதநேய பயிற்சி மையத்தில் படித்த 4,420 பேர் இதுவரை மாநில மற்றும் தேசிய அளவில் பல்வேறு உயர்பதவிகளில் உள்ளனர்.
இந்நிலையில் யு.பி.எஸ்.சி 2024 –ம் ஆண்டுக்கான ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். உள்ளிட்ட 1,056 சிவில் சர்வீசஸ் பதவிகளில் வரும் காலிப்பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியானது.
இந்த பதவிகளுக்கான முதன்மைத்தேர்வு எழுதுபவர்களுக்கு மாதாந்திர உதவித்தொகையும், முதன்மை, தேர்வில் தேர்ச்சி பெற்ற அனைவருக்கும் மாதிரி நேர்முகத்தேர்வுக்கான பயிற்சி மனிதநேய பயிற்சி மையத்தால் இலவசமாக அளிக்கப்பட்டது. நேர்முகத்தேர்வில் பங்குபெற்றவர்கள் டெல்லி சென்று வருவதற்கு விமான டிக்கெட், டெல்லில் தங்குவதற்கான வசதிகள் செய்து கொடுக்கப்பட்டன.
இவர்களில், வெற்றி பெற்ற 31 பேர் பணிநியமனம் செய்யப்பட்டிருப்பதாக மனிதநேய அறக்கட்டளை தலைவர் சைதை துரைசாமி தெரிவித்து இருக்கிறார்.
இது தொடர்பாக சைதை துரைசாமி அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:
“பணி நியமனம் பெற்றவர்களில் 9 பேர் ஐ.ஏ.எஸ் பதவிக்கும், ஒருவர் ஐ.எப்.எஸ் பதவிக்கும், 2 பேர் ஐ.பி.எஸ். பதவிக்கும், 9 பேர் ஐ.ஆர்.எஸ், பதவிக்கும், ஐ.ஆர்.எம்.எஸ், ஐ.எஸ்.எஸ். பதவிக்கு தலா 2 பேரும்,
ஐ.டி.ஏ.எஸ், ஐ.சி.எல்.எஸ், ஐ.சி.ஏ.எஸ், ஐ.பி. மற்றும் டி.ஏ.எப்.எஸ். ஐ.பி.ஓ.எஸ். ஐ.டி.எஸ். பதவிகளுக்கு தலா ஒருவரும் என 31 பேர் பணி நியமன ஒதுக்கீடு பெற்று உள்ளனர். மேலும் 4 பேருக்கு பணி ஒதுக்கீடு நிலுவையில் இருக்கிறது” என சைதை துரைசாமி தெரிவித்து இருக்கிறார்.
பணி நியமன ஒதுக்கிடு பெற்ற அனைவருக்கும் சைதை துரைசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார்.