சபா நாயகன்  – விமர்சனம்

சபா நாயகன்  – விமர்சனம்

சி.எஸ் கார்த்திகேயன் இயக்கத்தில் க்ளியர் வாட்டர் பிலிம்ஸ், ஐ சினிமா சார்பில் கேப்டன் மேகவாணன், இசைவாணன் தயாரிப்பில் சபா நாயகன் வெளியாகியிருக்கிறது.

நாயகனாக அசோக் செல்வன், கார்த்திகா முரளிதரன், சாந்தினி, மேகா ஆகாஷ், அருண், ஜெய்சீலன், ஸ்ரீராம், விவ்யாசாந்த், ஷெர்லின்சேத், அனீஷ், மைக்கேல் தங்கதுரை, உடுமலைப்பேட்டை ரவி, அக்ஷயா ஹரிஹரன்,  பிக்பாஸ் பாலா,  ராஸ்,  மனோகர், துளசி,  பாலமுருகன், ஷ்ரவந்தி, ரேஷ்மி நம்பியார், பாஸ்கரன் ஆகியோர் நடித்துள்ளனர்.

இந்த படத்திற்கு  லியோன் ஜேம்ஸ் இசையமைத்திருக்கிறார்.

படத்தின் கதை என்ன? கதாநாயகன் நண்பர்களுடன் இரவில் போதையில் வரும் அரவிந்த் என்கிற சபாவை காவல்துறையினர் கைது செய்கின்றனர். அவரை வ​ண்டியில் அழைத்துச் செல்கின்றனர். அதே சமயத்தில் சரக்கு வாங்கி வரும் ஒரு இளைஞரை காதல் தோல்வி என்று சொல்லும் போது அவரை விட்டுவிடுகின்றனர்.  அதனால் கடுப்பாகும் நாயகன் தன் பள்ளி, கல்லூரி வாழ்க்கையில் நடந்த காதல் தோல்விகளை போலீஸ்காரர்களுக்கு கூறுகிறார். பள்ளியில் படிக்கும் போது அவரது  வாழ்க்கையில் முதல் காதல் துளிர்க்கிறது. ஈஷா என்ற கார்த்திகா முரளிதரனை காதலிக்கிறார்., ஆனால் பயத்தின் காரணமாக உணர்வுகளை அப்படியே மூடிவைக்கிறார் நாயகன்.

 

பள்ளிப்படிப்பும் காதலை வெளிப்படுத்தாமலேயே  முடிந்து விடுகிறது.

அடுத்து  இன்ஜினியரிங் கல்லூரியில் சேரும் சபாவிற்கு  ஐடி துறையில் படிக்கும் ஸ்ரீரியாவுடன் (சாந்தினி சௌத்ரி) நட்பு கிடைக்கிறாது. காதல் தொடங்கும் முன்பே, நண்பனிடம் காதலியை பறி கொடுக்கிறார் நாயகன். இதன் பின்னர்  நெருங்கிய உறவினரான அக்கா நடத்தும் நவநாகரீக உடைகள் விற்கும் கடையில் தன் பள்ளி தோழி ஈஷாவை மீண்டும் பார்க்கிறார். பேசும் வாய்ப்பு கிடைக்கிறது தனது காதலை சொல்லும் போது, ஈஷா தனக்கு ஏற்கனவே காதலன் இருப்பதாக கூறிவிட்டு பிரிந்து மீண்டும் பிரிந்து செல்கிறார்.

அதன் பிறகு  உயர் கல்வி படிக்க  சேரும் போது மேகா ஆகாஷ் உடன்  நட்பு மலர்கிறது. இந்த நட்பு காதலாக மாறியதா? இல்லையா? ஈஷா மீண்டும் சபாவின் வாழ்க்கையில் வந்தாரா? அதற்கு சபா என்ன செய்தார்? என்பதே படத்தின் திருப்பம் நிறைந்த க்ளைமேக்ஸ்.

நாயகன் அசோக் செல்வன் அர்விந்த் என்கிற சபாவாக கதையின் நாயகனாக நடித்திருக்கிறார்.  பள்ளி, கல்லூரி நாட்களில் நடந்த காதல் தோல்விகளை விவரிப்பதில் படம் முழுவதும் நகைச்சுவை கலந்து, நட்பு, நண்பனின் காதல், பிரிவு, சோகம் நடிப்பில்  வித்தியாஷத்தை  காட்டுகிறார். ஜாலியான இளைஞனாகவும், பள்ளி மாணவனாகவும் இருவேறு கெட்டப்களில் அருமையாக நடித்துள்ளார்.

எதார்த்தமான  நடிப்பால் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்த அசோக் செல்வன் நகைச்சுவையைக் கையாள்வதில் இயல்பானவர் என்தால் சபாவின் கதாபாத்திரத்தை சிறப்பாக செய்துள்ளார்.

படத்தில்  நடித்த  மற்ற நடிகர்களும் தங்களுக்கு கொடுக்கப்பட்ட கதாபாத்திரத்தில் கட்சிதமாக பொருந்துகின்றனர். காதலிகளாக நடித்தவர்களும் மற்றும் பலர் படத்தின் முக்கியத்துவத்தை உணர்ந்து நகைச்சுவையை கலந்து நேர்த்தியாக அழகாக நடித்துள்ளனர்.

இந்த படத்திற்கு  பாலசுப்ரமணியம், தினேஷ் புருஷோத்தமன், பிரபு ராகவ் என்று மூன்று பேர் ஒளிப்பதிவு செய்துள்ளனர். இசையமைப்பாளர்  லியோன் ஜேம்ஸ்  தனது  திறமையை மீண்டும் நிரூபித்துள்ளார்.

ஈரோடு,கோயம்பத்தூர் சுற்றி நடக்கும் கதைக்களத்தில் ஒரு இளைஞனின் பள்ளி, கல்லூரி காலத்து நட்பு, காதல் தோல்விகளை சுவாரஸ்யத்துடன் நகைச்சுவையுடன்  சபா  நாயகனை கொடுத்திருக்கிறார்  இயக்குனர் சி.எஸ்.கார்த்திகேயன். மொத்தத்தில் சபா நாயகன் அனைவரையும் ஈர்க்கும் நகைச்சுவையில் நாயகன் வெளிவந்திருக்கிறது.

Related Posts