“அடிமைத்தனம் குறித்து எடப்பாடி பேசலாமா?”: ஸ்டாலின் கேள்வி!

“அடிமைத்தனம் குறித்து எடப்பாடி பேசலாமா?”: ஸ்டாலின் கேள்வி!

”அடிமைத்தனம் குறித்து பழனிசாமி பேசக்கூடாது,” என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்து உள்ளார்.

சேலத்தில் நடந்த இந்திய கம்யூனிஸ்ட் மாநாட்டில் பங்கேற்று அவர் பேசியதாவது:

எதிர்க்கட்சி தலைவர், பழனிசாமிக்கு, கம்யூனிஸ்டுகள் மீது, ‘குபீர்’ பாசம் பொத்துக்கொண்டு வருகிறது. அடிமைத்தனம் குறித்து பழனிசாமி பேசக்கூடாது. எங்களை பொறுத்தவரை, தி.மு.க., கூட்டணியில் யாரும் யாருக்கும் அடிமையில்லை.

பழனிசாமிக்கு மக்கள் மீதான அக்கறையில்லை. பிரச்னைக்கான தீர்வு காணும் அக்கறையும், நோக்கமும் இல்லை. அவதுாறு பேசி, கூட்டணி தலைவர்களை களங்கப்படுத்த வேண்டும். எப்படியாவது கூட்டணியை பிள வுபடுத்த வேண்டும் என்ற நோக்கத்தோடு அலைந்து கொண்டிருக்கின்றார்.

கம்யூனிஸ்டுகள், தி.மு.க., கூட்டணியில் இருந்தாலும், நியாயமான கோரிக்கை, விமர்சனங்களை முன்வைக்க தவறியதில்லை. நாங்களும் அவர்களது கோரிக்கைகளை புறக்கணித்தது கிடையாது. இதுதான் ஜனநாயகம். அதனால்தான் கூட்டணி பயணம் தொடர்ந்து கொண்டுள்ளது.

இவ்வாறு அவர் பேசினார்.

Related Posts