விமர்சனம்: இறைவன்

விமர்சனம்: இறைவன்

நேர்மையான – தைரியமான போலீஸ் அதிகாரி  அர்ஜுன் கிரிமினல்கள் அவரை கொலை செய்ய அலைகிறார்கள். ஆனாலும் துணிச்சலான நடவடிக்கைகளை எதிர்க்கும் அவர், இதனாலேயே திருமணம் வேண்டாம் என்ற முடிவில் இருக்கிறார்.

சைக்கோ கொலையாளியான பிரம்மா சிறுமிகளை கடத்தி, கொடூரமான முறையில் கொலை செய்கிறார்.

ஆரம்பத்தில் திண்டாடும் போலீஸ், ஒருவழியாக அவனை பிடித்து கொல்கிறது. ஆனால் அதன் பிறகும் கொலைகள் தொடர்கின்றன.

இந்த நிலையில் போலீஸ் அதிகாரி அர்ஜுன், உண்மையான கொலைகாரனை கண்டுபிடித்து விடுகிறார். ஆனால் போலீஸே இதை நம்ப மறுக்கிறது.

இதைத் தொடர்ந்து என்ன நடக்கிறது என்பதுதான் கதை.படம் ஆரம்ப – வில்ன் அறிமுக – காட்சியே  அதிரவைக்கிறது. அதன் பிறகு நிமிடத்துக்கு நிமிடம் ரத்தமும், கொலைகளும் கதிகலங்க வைக்கின்றன.

சிறப்பான திரைக்கதைக்காக இயக்குநரை பாராட்டலாம்.

படம் துவங்கிய சில நிமிடங்களிலேயே சைக்கோ கொலையாளியை கண்டுபிடித்து கைது செய்கிறார்கள். வழக்கமாக கிளைமாக்ஸில் நடப்பது ஆரம்பத்திலேயே நடக்கிறதே என நினைக்கிறோம்.

கொலையாளியை தான் கைது செய்துவிட்டார்களே அடுத்த இரண்டு மணிநேரம் என்ன செய்வார்கள் என்கிற ஆவல் எழுகிறது. ஆனால்  அதன் பிறகும் கதையை சுவாரஸ்யமாக கொண்டு சென்றிருக்கிறார்கள்.

தவிர, குற்றவாளி யார் என ஹீரோவுக்கு தெரிந்துவிடுகிறது. ஆனால் நிரூபிக்க முடியவில்லை என்கிற கோணம் சிறப்பு.அதே நேரம் இன்னொரு கதாபாத்திரத்தை கொண்டு வராமல் ராகுல் போஸ் மட்டும் ஒரே சைக்கோவாக இருந்திருக்கலாம் என தோன்றுகிறது.

எல்லா இழப்புகளையும் தாங்கி, தொடர்ந்து போராடி வெற்றி பெறுகிறா் ஹீரோ (ஜெயம் ரவி). அபார நடிப்பு.  மனதிற்குள்ளேயே ஆத்திரத்தையும், சோகத்தையும் மறைத்துவைத்து போலீஸ் அதிரியாக தனது பணியை செய்வது சிறப்பு.

யுவன் ஷங்கர் ராஜாவின் இசை படத்திற்கு கை கொடுத்திருக்கிறது.

ரசிக்கவைக்கும்  சைக்கோ த்ரில்லர்!

 

Related Posts