“தமிழனா பொறந்தது தப்பா?”: எதிர்பார்ப்பை எகிற வைக்கும் ‘ரிபெல்’ ட்ரெய்லர்!

“தமிழனா பொறந்தது தப்பா?”: எதிர்பார்ப்பை எகிற வைக்கும் ‘ரிபெல்’ ட்ரெய்லர்!

ஸ்டூடியோ கிரீன் சார்பில் ஞானவேல் ராஜா தயாரிக்க, ஜி.வி. பிரகாஷ் இசையமைத்து நாயகனாக நடிக்கும் படம், ரிபெல்.  பட அறிவிப்பு வெளியானதில் இருந்தே எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வருகிறது.

இப்படத்தில் மமிதா பைஜூ, கருணாஸ், சுப்பிரமணிய சிவா, ஷாலு ரஹீம், ஆதித்யா பாஸ்கர், கல்லூரி வினோத், ஆதிரா உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.

அறிமுக இயக்குநர் நிகேஷ் ஆர்.எஸ். ரெபல் படத்தை உருவாக்கி உள்ளார். அருண் ராதாகிருஷ்ணன் ஒளிப்பதிவு செய்ய, ஜி.வி பிரகாஷே இப்படத்துக்கு இசையமைத்து இருக்கிறார்.

முன்னதாக இயக்குநர் நிகேஷ் ஆர்.எஸ்., “ரெபல் படம் 1980களில் நடந்த உண்மை சம்பவங்களை தழுவி எடுக்கப்பட்டது” என தெரிவித்து இருந்தது எதிர்பார்ப்பை அதிகரிக்கச் செய்தது. இந்நிலையில் படத்தின் டிரெய்லர் வெளியாகி  எதிர்பார்ப்பை எகிறச் செய்து உள்ளது.

 எப்படி இருக்கிறது டிரெய்லர்?

தமிழ்நாடு – கேரளா எல்லைப்பகுதியான  பாலக்காட்டில் உள்ள கல்லூரியில் படிக்கும் தமிழ் மாணவர்கள் பற்றிய படம் என்பது புரிகிறது.  கல்லூரியில் நடக்கும் மாணவர் தேர்தலில் தமிழ்நாடு – கேரளா மாணவர்களிடையே ஏற்படும் அரசியல் மோதல் பற்றியும் பேசப்பட்டு உள்ளது.

இந்த ட்ரெய்லரில், “உன்னை இங்க படிக்க விட்டதே பெரிய விஷயம்..என் ஊர்ல வந்து என்னுடைய கட்சிக்கும், மொழிக்கும் எதிரா இருப்பியா” என தமிழ்நாடு மாணவர்களை கேரள மாணவர்கள் கேட்பது போல காட்சிகள் இடம் உள்ளன.

அதேபோல், ‘மத்தவங்க ஜெயிக்கறதுக்காக  விழுந்த ஒவ்வொரு தமிழனோட ஓட்டும் இனிமே  ஒரு தமிழனுக்காகத்தான் விழணும்..  ’ இ “தமிழனா பிறந்தது தப்பா’ என அனல் பறக்கும் வசனங்கள் ஈர்க்கின்றன.

ஜிவி பிரகாஷிின் அதிரடி சண்டை காட்சியும், ரசிக்க வைக்கும் காதல் காட்சியும் கவனத்தைப் பெறுகின்றன.

சேர நாட்டு, அகிசம்சை.. ஆகிய பாடல்கள் ரசிக்கவைக்கின்றன.

மொத்தத்தில், படத்தின் மீதான எதிர்பார்ப்பை, மேலும் மேலும் இந்த டிரெய்லர் மேலும் அதிகரித்து உள்ளது.

Related Posts