“ரஜினி நடிகர் இல்லை…!”: ராம் கோபால் வர்மா விளக்கம்!
சர்ச்சைக்குப் பெயர் போனவர், இயக்குநர் ராம் கோபால் வர்மா. கடந்த மாதம் இவர், “கதாபாத்திரத்தை பற்றியது நடிப்பு, பெர்ஃபாமன்ஸை பற்றியது ஸ்டார். நடிகருக்கும், ஸ்டாருக்கும் இடையே நிறைய வித்தியாசம் உண்டு. ரஜினிகாந்த் ஒரு நல்ல நடிகரா என்று கேட்டால் எனக்கு தெரியவில்லை. அவரால் பிக்கு மஹாத்ரேவாக நடிக்க முடியாது என்றே நினைக்கிறேன். ஆனால் ரஜினியை ஸ்டாராக பார்க்கவே அனைவரும் விரும்புகிறார்கள்.

ஸ்லோ மோஷன் இல்லாமல் ரஜினியால் தாக்குப்பிடிக்க முடியுமா என தெரியவில்லை. எதுவும் செய்யாமல் பாதி படம் முழுக்க ரஜினி ஸ்லோ மோஷனில் நடப்பதை பார்க்க விரும்புகிறார்கள். அது ரசிகர்களுக்கு பிடிக்கும்.
ரஜினியை அவரின் ரசிகர்கள் கடவுளாக பார்க்கிறார்கள். அதனால் அவரால் சாதாரண கதாபாத்திரங்களில் நடிக்க முடியாது. ஸ்டார் கதாபாத்திரங்களில் மட்டுமே நடிக்க முடியும்” என்றார்.
இந்த நிலையில் ராம் கோபால் வர்மா திரைக்கதை அமைத்து, தமிழிலும் வெளியாக உள்ள, ‘சாரி’ என்ற திரைப்பட பிரமோஷன் நிகழ்ச்சிக்காக சென்னை வந்திருந்தார்.
நம்முடன் ஒரு செல்ஃபி பேட்டி
அவரிடம் நான் tamilankural.com இதழின் சார்பாக ஒரு மினி செல்ஃபி பேட்டி(!) எடுத்தேன். அவரிடம், “ரஜினியை நடிகர் அல்ல… வெறும் சூப்பர் ஸ்டார்தான் என்று கூறினீர்களே.. அதே கருத்தில்தான் இப்போதும் இருக்கிறீர்களா” என்று கேட்டேன்.
அதற்கு ராம் கோபால் வர்மா, “நோ.. நோ..! ஸ்லோமோஷன் – மெதுவான நடையில் உள்ள- காட்சிகளில் நடிக்க ரஜினி சார் போல வேறு யாரும் இல்லை என்று தான் சொன்னேன்!” என்றார்.
ராம்கோபால் வர்மா ஏற்கெனவே ரஜினியை சில முறை கிண்டல் செய்துள்ளார்.
ரஜினி கட்சி தொடங்கியபோது. ரஜினி இந்திய பிரதமரானால், அமெரிக்கா போல் மாறும் என கிண்டலடித்தார்.
அதே போல, “அமிதாப்பச்சனின் “Te3n” படத்தில் ரஜினி நடித்திருந்தால் காமெடியாக இருக்கும்! ரஜினியால் ஒரே மாதிரியான பாத்திரங்களில் மட்டுமே நடிக்க முடியும் என்றும் சுதீப்பால் பன்முகத்தன்மை படங்களில் நடிக்க முடியும்” என்றும் தெரிவித்து இருந்தார்.
இதற்கெல்லாம் அப்போது ரஜினி ரசிகர்கள் சமூகவலைதளங்களில் கடும் எதிர்ப்பு தெரிவித்து இருந்தனர்.
இவை குறித்து கேட்கலாம் என்றால், கிளம்பிச் சென்றுவிட்டார்.
– டி.வி.சோமு
ராம்கோபால் வர்மா, ரஜினி குறித்து பேசிய செல்ஃபி பேட்டி…
