“வன்னியரை உயர்த்தும் பாடல்களை எழுதி தருகிறேன் என்றார் வைரமுத்து!”: தயாரிப்பாளர்கள் நெகிழ்ச்சி!ச்சி அடைகிறேன்.

வ. கௌதமன் இயக்கி, நடித்திருக்கும் திரைப்படம், ‘படையாண்ட மாவீரா’ . இத் திரைப்படத்தில் சமுத்திரக்கனி, பூஜிதா பொன்னாடா, இளவரசு, ‘ ‘நிழல்கள்’ ரவி , உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.
ஜி.வி பிரகாஷ் குமார் இசை அமைதது உள்ளார்.
இந்த திரைப்படத்தை வி கே புரொடக்ஷன்ஸ் நிறுவனம் சார்பில் நிர்மல் சரவணனராஜ், எஸ். கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கிறார்கள். இந்த திரைப்படத்தில் வ.கௌதமன், ஈ. குறளமுதன், யு .எம். உமாதேவன், கே. பாஸ்கர், கே. பரமேஸ்வரி ஆகியோர் இணை தயாரிப்பாளர்களாக பங்காற்றியுள்ளனர்.
வன்னியர் சங்க தலைவராகவும், பா.ம.கட்சியின் முக்கிய பிரமுகராகவும் விளங்கிய, காடுவெட்டி குருவின் வாழ்க்கை வரலாறு என்பதால் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.
வரும் 19ம் தேதியன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகும் இந்த திரைப்படத்தினை செய்தியாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. படக்குழுவினருடன் தயாரிப்பாளரும் இயக்குநருமான சுரேஷ் காமாட்சி, இயக்குநரும், நடிகருமான தங்கர் பச்சான், நடிகர் ஏகன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.
இந்நிகழ்வில் தயாரிப்பாளர் கிருஷ்ணமூர்த்தி பேசுகையில், ”காடுவெட்டி குரு அப்பகுதியில் வாழ்ந்த அனைத்து மக்களுக்காகவும் பாடுபட்டவர்.
கடந்த ஒரு வாரமாக சமூக ஊடகங்களை பார்வையிட்டு வருகிறேன். அதில் இடம்பெறும் கமெண்ட்டுகள் மோசமாக இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தேன். ஏனிந்த சாதிய வன்மம் என புரியவில்லை,” என்றார்.
தயாரிப்பாளர் குறளமுதன் பேசுகையில், ”நான் அடிப்படையில் ஒரு சிவில் இன்ஜினியர். எனக்கும், சினிமாவிற்கும் எந்த சம்பந்தமும் இல்லை. இயக்குநர் கௌதமன் என்னை சந்தித்து சமகாலத்தில் நம்முடன் வாழ்ந்து மறைந்த மாவீரர் காடுவெட்டி குருவைப் பற்றி படம் எடுக்க வேண்டும் என்று சொன்னார். அவர் அந்த கதையை சொல்லும்போது நாங்கள் வியப்பில் ஆழ்ந்தோம். அதன் பிறகு இதனை எப்படி தயாரிப்பது என திட்டமிட்டோம். இந்த படைப்பு மிகப்பெரும் வரலாறாக இருக்க வேண்டும் என்றும், மண்ணை காக்கவும் பெண்ணை காக்கவும் குருவைப் போன்ற ஒரு தலைவர் இருந்தார் என்பதை பதிவு செய்வதற்காகவும் இதை உருவாக்க தீர்மானித்தோம். இதனால் திரள் நிதி (கிரவுட் ஃபண்டிங்) முறையில் இப்படத்திற்காக நிதி திரட்ட தொடங்கினோம்.
மிகப்பிரம்மாண்டமான திரைப்படமாக உருவாகியிருக்கிறது. இதனால் திட்டமிட்டதை விட பட்ஜெட் அதிகமானது. இந்நிலையில் தயாரிப்பாளர் கிருஷ்ணமூர்த்தி எங்களுடன் இணைந்தார். அவரைத் தொடர்ந்து தயாரிப்பாளர் சரவணன் ராஜும் ஆதரவு தெரிவித்தார்.
இந்தப் படத்தை ஒதுக்கிட வேண்டாம். அனைவரும் இந்த படத்தை பாருங்கள். தமிழகத்தில் உள்ள இரு பெரும் சமூகங்கள் ஒன்றிணைந்தால் தமிழகம் வளர்ச்சி அடையும். இதை உணர்ச்சிப்பூர்வமாக இயக்குநர் கௌதமன் இயக்கியிருக்கிறார். மூன்றாண்டுகள் தவமிருந்து இப்படத்தை அவர் உருவாக்கியிருக்கிறார். எந்த பாகுபாடும் பார்க்காமல் இந்த படத்தை வெற்றி பெறச் செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்,” என்றார்.
தயாரிப்பாளர் உமாதேவன் பேசுகையில், ”படையாண்ட மாவீரா என்ற எங்களது முதல் குழந்தையை நாங்கள் பிரசவித்திருக்கிறோம். இப்படத்தைப் பற்றி இயக்குநர் கௌதமன் எங்களிடம் விவாதித்த போது எங்களால் முடியுமா? என்ற சந்தேகம் தான் எழுந்தது.
இன்று நாடு சென்று கொண்டிருக்கும் நிலையில் பொருளாதாரம் தான் முக்கியம். கல்வி, வேலைவாய்ப்பு ஆகியவற்றை போல பொருளாதாரமும் முக்கியமாகிறது. இதன் அடிப்படையில் வி கே வணிக குழுமம் இப்படத்தின் தயாரிப்பில் தனது பங்களிப்பை வழங்கி இருக்கிறது. இப்பகுதியில் வாழ்ந்து மறைந்த மக்கள் தலைவரின் வரலாற்றை மக்களுக்கு தெரிவிக்க வேண்டும் என்கிற நோக்கத்துடன் இந்த திரைப்படத்தை உருவாக்கினோம்.
இப்படத்தின் பாடல்களுக்காக முதன்முதலாக கவிப்பேரரசு வைரமுத்துவை சந்தித்தபோது எங்களுக்கு தெரியாத, எங்கள் சமுதாயம் கண்ட பல்வேறு வரலாற்று நிகழ்வுகளை எல்லாம் சொல்லி, அந்த சமுதாயத்தை உயர்த்துகின்ற பாடல்களை எழுதி தருகிறேன் என்று சொன்னார். இதை இங்கு சொல்வதில் நான் மகிழ்ச்சி அடைகிறேன்.
இரு பெரும் சமுதாயங்களாக பிரிந்து கிடக்கும் தமிழகத்தில், இவர்கள் தமிழ் சமுதாயமாக ஒன்றிணைய வேண்டும். இந்த நோக்கத்துடன் தான் வ. கௌதமன் இப்படத்தை உருவாக்கியிருக்கிறார். இதனால் இந்தப் படத்தை வெற்றி பெறச் செய்ய வேண்டியது உங்களின் பொன்னான கடமை,” என்றார்.
தயாரிப்பாளர் அய்யனார் கண்ணன் பேசுகையில், ”தடம் பார்த்து நடப்பவன் மனிதன். தடம் பதித்து நடப்பவன் மாமனிதன். அத்தகைய மாமனிதனாக வாழ்ந்து மறைந்த காடுவெட்டி குருவின் வாழ்க்கை வரலாற்றை, அத்தனை சமுதாயத்திற்கும் அவர் ஆற்றிய தொண்டுகளை, நல்ல செயல்களை இப்படம் பேசுகிறது.
குடிதாங்கி எனும் ஊரில் தாழ்த்தப்பட்டவரின் சடலத்தை ஒரு வீதி வழியாக எடுத்துச் செல்ல அனுமதி மறுக்கப்படுகிறது. அந்த தருணத்தில் மருத்துவர் ஐயாவின் கட்டளையை ஏற்று காடுவெட்டி குரு அவர்கள் அந்த சடலத்தை தனது தோளில் சுமந்து அந்த வீதி வழியாக சென்றார். அதனால் தான் அவரை மக்கள் மாவீரன் என்று போற்றுகிறார்கள். அத்துடன் அந்த கிராமப் பகுதிகளில் நடைமுறையில் இருந்த இரட்டை குவளை முறையையும் ஒழித்துக் கட்டினார் காடுவெட்டி குரு. அந்த வகையில் சமூக நீதிக்காக பாடுபட்ட ஒரு தலைவராகத்தான் காடுவெட்டி குரு திகழ்கிறார்.
இப்படத்தில் இடம்பெறும் பாடல்களும், படமும் வெற்றி பெற நாம் அனைவரும் ஒன்றிணைந்து ஆதரவு தர வேண்டும். மக்கள் தலைவராக மறைந்த காடுவெட்டி குருவை நாம் கொண்டாட வேண்டும்,” என்றார்.
தயாரிப்பாளர் ‘கிரியாடெக்’ பாஸ்கர் பேசுகையில், ”தமிழக ஆளுநர் மாளிகையில் இருந்து மறைக்கப்பட்ட மக்கள் தலைவர்கள் பற்றிய ஆய்வினை சமர்ப்பிக்கலாம் என்ற ஒரு செய்தி கிடைத்தது. சுதந்திர போராட்ட காலத்தை கடந்து சமகாலத்தில் மக்களுக்காக பணியாற்றிய ஏராளமான அரசியல் தலைவர்கள் மறைக்கப்பட்டிருக்கிறார்கள் என்ற உண்மையை கண்டறிந்தோம். இவரைப் போன்ற மக்களுக்காக பாடுபட்ட அரசியல் தலைவர்கள் அனைத்து சமூகங்களிலும் இருப்பதையும் கண்டறிந்தோம். இப்படிப்பட்ட தலைவர்களைப் பற்றி மக்களிடத்தில் எடுத்து சொல்ல வேண்டும் என்பதற்காக இப்படத்தை உருவாக்கினோம்.
இந்தத் திரைப்படம் ஆபாசம் இல்லாமல், வன்முறை இல்லாமல் உருவாகி இருக்கிறது. அதனால் இப்படம் குடும்பத்தினருடனும் பெண் பிள்ளைகளுடனும் திரையரங்கத்திற்கு சென்று பார்க்கும் வகையில் தயாராகி இருக்கிறது,” என்றார்.