விவசாயத்தில் விஷம்! ஜூலை 24-ல் ‘தி இந்தியா ஸ்டோரி’ அதிரடி ரிலீஸ்!
திரையுலகில் ஒரு புதுவித பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது ‘தி இந்தியா ஸ்டோரி’! Zee Studios மற்றும் MIG Production கூட்டணி சேர்ந்து உருவாக்கியிருக்கும் இந்த படத்தோட புதிய போஸ்டர் இப்போ சோஷியல் மீடியால செம வைரல்.
சேட்டன் DK இயக்கத்தில், சாகர் B. ஷிண்டே எழுதி தயாரித்துள்ள இந்த படம், வரும் ஜூலை 24, 2026 அன்னிக்கு தமிழ், இந்தி, தெலுங்குனு ஒரே நேரத்துல தியேட்டர்களை அதிரவைக்க வருது!
போஸ்டரில் அப்படி என்னதான் இருக்கு?
புதிய போஸ்டரை பார்த்தாலே பதற்றம் தொற்றிக்குது! காய்கறி சந்தையின் நடுவே, கோபத்தின் உச்சத்தில் இருக்கும் பொதுமக்கள் கூட்டத்திற்கு நடுவே காஜல் அகர்வாலும், ஷ்ரேயாஸ் தல்படேவும் நிக்கிறாங்க. வியாபாரிகள் இருவர் மீதும் காய்கறிகளை வீசி எறிய, சூழ்நிலை பயங்கர டென்ஷனா மாறுது!
போஸ்டர்ல இடம்பெற்றிருக்கும் “Slow Poison in Progress…” என்ற வரிகள், நம்மை அறியாமலே உணவில் கலக்கும் நஞ்சைப் பற்றி எச்சரிக்கும் விதமாக அமைந்திருக்கிறது.
படத்தின் மையக்கரு
விவசாயத்தில் பயன்படுத்தப்படும் நச்சு பூச்சிக்கொல்லிகள் மனிதர்களின் உடல்நலனை எப்படியெல்லாம் சீரழிக்குதுங்கிற அதிர்ச்சி உண்மையை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள கோர்ட்ரூம் டிராமா (Courtroom Drama) தான் இந்த படம். உண்மைச் சம்பவங்களின் பின்னணியில் உருவான இந்த திரைக்கதை, பார்வையாளர்களை நிச்சயம் சிந்திக்க வைக்கும்.
இயக்குநர் சேட்டன் DK :
“உண்மையை பேசுறது சாதாரண விஷயமில்லை, அதுக்கு ஒரு பெரிய விலை கொடுக்கணும்! அமைப்பை கேள்வி கேட்கும்போது முதலில் வெளிப்படுவது கோபமும் பயமும்தான். நாம் உண்ணும் உணவை பற்றியும், நம் நம்பிக்கைகளை பற்றியும் யோசிக்க வைக்கும் போராட்டம்தான் இந்த படம்.”
படக்குழு
-
தயாரிப்பு: Zee Studios & MIG Production
-
இயக்கம்: சேட்டன் DK
-
எழுத்து & தயாரிப்பு: சாகர் B. ஷிண்டே
-
நடிப்பு: காஜல் அகர்வால், ஷ்ரேயாஸ் தல்படே
-
ஒளிப்பதிவு: நிஷாந்த் பகவத்
-
இசை: மங்கேஷ் தாக்டே
-
படத்தொகுப்பு: ஆஷிஷ் மாத்ரே
-
ஒலி வடிவமைப்பு: அன்மோல் பாவே
உண்மையை உரக்கச் சொல்ல வரும் இந்த ‘தி இந்தியா ஸ்டோரி’ ஜூலை 24 முதல் திரையரங்குகளில் கொண்டாட்டத்திற்கு தயார்!

