‘ஒன்ஸ் மோர்’ : அர்ஜுன் தாஸ் – அதிதி ஷங்கரின் அல்டிமேட் ஆட்டம்… ஈர்க்கும் டிரைலர்! 

‘ஒன்ஸ் மோர்’ : அர்ஜுன் தாஸ் – அதிதி ஷங்கரின் அல்டிமேட் ஆட்டம்… ஈர்க்கும் டிரைலர்! 

‘கான் சிட்டி’ படத்தோட மாஸ் வெற்றிக்குப் பிறகு, நம்ம அர்ஜுன் தாஸுக்கு அடுத்த கட்ட பிளாக்பஸ்டர் கன்ஃபர்ம்ங்குற அளவுக்கு வெறித்தனமாக வெளியாகியிருக்கு ‘ஒன்ஸ் மோர்’ டிரைலர்! விக்னேஷ் ஸ்ரீகாந்த் இயக்கத்துல அர்ஜுன் தாஸ், அதிதி ஷங்கர், சோனா ஒலிக்கல் கூட்டணி அமைச்சு உருவாக்கியிருக்க இந்த படம், வர்ற ஆகஸ்ட் 28-ஆம் தேதி தியேட்டர்களை தெறிக்கவிட வருது.

அதே ஆகஸ்ட் 28 அன்னைக்கு, கவின் – நயன்தாரா கூட்டணியின் ‘ஹாய்’ படமும் களத்துல இறங்குவதால், பாக்ஸ் ஆபீஸ்ல செம மாஸ் மோதல் இருக்கப்போகுது. இன்னொரு பக்கம் புதன்கிழமையே யஷ்ஷோட ‘டாக்ஸிக்’ படம் தியேட்டர்களை அள்ளப்போகுது. இதனால் தியேட்டர் கிடைக்கறதுல சின்ன இழுபறி இருந்தாலும், ரசிகர்களுக்கு செம கொண்டாட்டம் தான்! அதுமட்டுமில்லாம, செப்டம்பர் படங்களுக்கு இருக்கற ஓடிடி பிரச்சனைகள் எதுவும் இந்த ரெண்டு படங்களுக்கும் இல்லையாம். தியேட்டர்ல தவறவிட்டாலும் 4 வாரத்துல ஓடிடில பாத்துக்கலாம்!

மில்லியன் டாலர்ஸ் ஸ்டூடியோஸ் வரிசையாக க்யூட்டான ஹிட் படங்களை இறக்கிட்டு வர நிலையில, ‘ஒன்ஸ் மோர்’ படமும் அந்த லிஸ்ட்ல சேரப்போகுது. அர்ஜுன் தாஸ் ஒவ்வொரு படத்துலயும் நடிப்பை மெருகேத்தி வேற லெவல்ல ஃபார்ம் ஆகியிருக்காரு. விருமன், மாவீரன், நேசிப்பாயாவுக்கு அப்புறம் அதிதி ஷங்கரை திரையில பார்க்க ஏங்கிய ரசிகர்களுக்கு, இந்த டிரைலர் செம விருந்து!

பழைய தளபதி விஜய்யோட ‘ஒன்ஸ் மோர்’ கதை மாதிரியே, அக்காவை ஏமாத்திட்டான்னு பழிவாங்க அர்ஜுன் தாஸை அதிதி துரத்துறாரோனு ஒரு டவுட் வருது. ஆனா, முதல் காதல் தோல்வியால காதலே வேணாம்னு ஓடுற அர்ஜுன் தாஸை, விரட்டி விரட்டி காதலிக்கும் கேரக்டர்ல அதிதி ஷங்கர் பின்னிப் பெடலெடுத்திருக்காரு! ஆகஸ்ட் 28-ல் வர்ற இந்த ரெண்டு காதல் படங்களும் இளைஞர்களுக்கு செம ட்ரீட்டா இருக்கும்!

Related Posts