நெல்லை: உலகதரம் வாய்ந்த புதிய திரையரங்கம்..!
திருநெல்வேலி மாநகராட்சிக்கு உட்பட்ட வண்ணார்பேட்டை பகுதியில் பி.எஸ்.எஸ். மல்டிபிக்ஸ் திரையரங்கம் துவக்கப்பட்டு உள்ளது.
இது ஒரு அதிநவீன திரையரங்கம் ஆகும். முழுதும் குளிரூட்டப் பட்ட இத்திரையரங்கில் டால்பி ஆட்டோமேட்டிக் சிஸ்டத்தில் ஒலி அமைப்பு, அகலமான திரை, 4கே 3 டி அமைபபு என உலகத் தரம் வாய்ந்த அனைத்து நவீன வசதிகளும் உள்ளன.
“இப்போது மக்கள் வசதியுடன் படம் பார்க்க விரும்புகிறார்கள். அதற்கேற்ற தரத்துடன் இத்திரையங்கம் உருவாக்கப்பட்டு உள்ளது. இது ரசிகர்களுக்கு புதிய அனுபவத்தைத் தரும்” என நிர்வாகிகள் தெரிவித்தனர்.
இத்த திரையரங்கை ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனத்தில், இணை தயாரிப்பாளர் எம்.செண்பகமூர்த்தி நேற்று (21.10.22 வெள்ளிகிழமை) திறந்து வைத்தார்.

