நல்ல படம்: விமர்சனம்

நல்ல படம்: விமர்சனம்

மதுப் பழக்கத்தின் சீரழிவைச் சுட்டிக்காட்டும் வகையில ‘நல்ல படம்’ங்கிற திரைப்படம் தயாராகியிருக்கு. சி பிரபு ராம் இயக்கியிருக்கார்.  டாக்டர் ஏ ஹரிஷ் ஹீரோவா நடிக்க, தனலட்சுமி கதாநாயகியா வர்றாங்க.

சரக்கடிக்கு அடிமையான ஒருத்தரைச் சுத்தியே இதன் கதைக்களம் நகருது. பெத்த அம்மாவும் கூடப் பிறந்த தங்கச்சியும் இந்த எழவெடுத்த பழக்கத்தைக் காரித் துப்பி எதிர்க்கிறாங்க. இன்னொரு பக்கம், காதலியும் அவனை எப்படியாவது திருத்தி நல்வழிப்படுத்தத் துடிச்சுப் போராடுறா. இதற்கிடையே, குடியைக் கொண்டாடுற சிலர் எல்லாம் சேர்ந்து ஒரு புது சங்கத்தை ஆரம்பிச்சு, நம்ம ஆளையே அதுக்கு தலைவனாவும் உட்கார வைக்கிறாங்க.

விஷயம் இப்படி போயிட்டு இருக்கும்போதுதான், நாடு முழுக்கவும் டாஸ்மாக், மதுக்கடைகளுக்கு அரசு அதிரடியா தடை போடுது. அவ்ளோதான்… குடிச்சுப் பழகின உடம்புக்கு இனி சரக்கு இல்லாம காலத்தை எப்படி ஓட்டுறதுன்னு அந்தப் பெரிய சவாலை அவங்க சந்திக்க வேண்டி வருது.

அதுக்கப்புறம் அவங்க வாழ்க்கையில நடக்குற தாறுமாறான சம்பவங்களும், புதுச் சூழலைச் சமாளிக்க முடியாம மாட்டிக்கிட்டு முழிக்கும்போது உருவாகுற கலகலப்பான கலாட்டாவும்தான் இந்த ‘நல்ல படம்’.

ஹீரோவா வர்ற டாக்டர் ஏ ஹரிஷ், பாத்திரம் அறிஞ்சு நடிச்சிருக்காரு. நிஜத்திலேயே குடிப்பழக்கு அடிமையான இளைஞர் மாதிரி வர்றாரு. அம்மா கிட்டயும், தங்கச்சிகிட்டயும் எகிர்றது.. காதலிகி்ட்ட பம்முறதுன்னு இந்தக் கால இளைஞரை கண் முன்னால நிறுத்துறார். சண்டைக் காட்சியிலயும் தூள் பறத்துறார்.

ஹீரோயின் தனலட்சுமியும் சிறப்பா நடிச்சிருக்காங்க. மருத்துவ மாணவியான இவரு, மதுக்கடை பார் நடத்துறவரை காதலிக்கிறதும், அதில உறுதியா இருந்து திருத்த முயற்சிக்கிறதும் சிறப்பு.

மொட்டை ராஜேந்திரன், கல்கி ராஜா, ரமா, பிரியதர்ஷினி உட்பட பலர் முக்கியமான வேஷங்கள்ல, பாத்திரம் உணர்ந்து நடிச்சிருக்காங்க.

இசை, ஒளிப்பதிவு எல்லாமே கதைக்கு பலம் சேர்க்குது.

குடிப்பழக்கத்தால தனிப்பட்ட மனுஷனுக்கும், குடும்பத்துக்கும், சமூகத்துக்கும் என்ன மாதிரியான சீரழிவுகள் வருதுங்கிறதை இந்த சினிமா அழுத்தமாப் பேசுது. அதேநேரம் காமெடியும், காதலும், பாசப் போராட்டமும், சமூக விழிப்புணர்வும் கலந்து எல்லாத் தரப்பு மக்களையும் கவரும்படி இதை உருவாக்கியிருக்காங்க.

Related Posts