‘நாகபந்தம்’: கடவுள் பார்வதியாக நபா நடேஷ்! ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு!

‘நாகபந்தம்’: கடவுள் பார்வதியாக நபா நடேஷ்! ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு!

“நாகபந்தம்” (Nagabandham) எனும் பிரமாண்ட புராண ஆக்ஷன் திரைப்படம், இயக்குநர் அபிஷேக் நாமாவின் கனவு முயற்சியாக உருவாகி வருகிறது. விராட் கர்ணா நாயகனாக நடிக்கும் இந்த படம், தயாரிப்பின் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், ‘பார்வதி’ கதாபாத்திரத்தில் தோன்றும் நாயகி நபா நடேஷின் (Nabha Natesh) ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது.

மகர சங்கராந்தியை முன்னிட்டு வெளியிடப்பட்ட இந்த போஸ்டரில், பாரம்பரிய உடையில் நபா நடேஷ் மிகுந்த அழகும் ஆன்மிக ஒளியும் நிறைந்த தோற்றத்தில் காட்சியளிக்கிறார். அழகிய சேலை, நுட்பமான ஆபரணங்கள், அமைதியான முகபாவனை—அனைத்தும் அவரது கதாபாத்திரத்தின் பக்தி, தூய்மை மற்றும் புராண அம்சத்துடன் உருவாக்கப்பட்டிருப்பதை வெளிப்படுத்துகிறது.

போஸ்டரில் படத்தின் தரத்தை களத்தை வெளிப்படுத்தும் வகையில், நாயகி அருகே நீல நிறப் பறவை, ஒரு பிரம்மாண்ட மயில் மற்றும் கோவில் பின்னணி இடம் பெற்றுள்ளன. ‘பார்வதி’ கதாபாத்திரத்தின் ஆன்மிக அடையாளத்தையும், படத்தின் கருப்பொருளையும் இந்த ஒரே போஸ்டர் அழகாக எடுத்துரைக்கிறது.

இந்த படத்தில் மற்றொரு நாயகியாக ஐஸ்வர்யா மேனன் நடித்துள்ளார். மேலும் ஜகபதி பாபு, ஜெயப்பிரகாஷ், முரளி ஷர்மா, B. S. அவினாஷ் உள்ளிட்ட முன்னணி நடிகர்கள் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

இந்தியாவின் பழமையான விஷ்ணு கோவில்களைப் பின்னணியாகக் கொண்டு உருவாகும் நாகபந்தம் திரைப்படம், நம் மரபின் புனித ரகசியங்களை மையமாக வைத்து, புராணம், சஸ்பென்ஸ் மற்றும் தெய்வீக பாரம்பரியத்தை இன்றைய காலகட்ட கதையுடன் இணைக்கும் வித்தியாசமான திரைக்கதை அமைப்பைக் கொண்டுள்ளது.

ஒளிப்பதிவு சௌந்தர் ராஜன் S, எடிட்டிங் RC பிரணவ், கலை இயக்கம் அசோக் குமார் என முன்னணி தொழில் நுட்ப கலைஞர்கள் பணியாற்றுவதால், படம் மிகச் சிறப்பாக அமையும் என்ற எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.

கிஷோர் அன்னபூரெட்டி மற்றும் நிஷிதா நாகிரெட்டி ஆகியோரின் தயாரிப்பில் உருவாகும் நாகபந்தம், இந்த கோடைக்காலத்தில் தெலுங்கு, இந்தி, தமிழ், கன்னடம் மற்றும் மலையாளம் ஆகிய பல மொழிகளில் பிரம்மாண்டமாகத் திரையரங்குகளில் வெளியாகத் தயாராகி வருகிறது.

நடிப்பு:
விராட் கர்ணா, நபா நடேஷ், ஐஸ்வர்யா மேனன், ஜகபதி பாபு, ஜெயபிரகாஷ், முரளி சர்மா, B.S.அவிநாஷ் மற்றும் பலர்

தொழில்நுட்ப குழு

கதை / திரைக்கதை / இயக்கம்: அபிஷேக் நாமா
தயாரிப்பாளர்கள்: கிஷோர் அன்னபூரெட்டி, நிஷிதா நாகிரெட்டி
ஒளிப்பதிவு: சௌந்தர் ராஜன் S
இசை: அபே, ஜுனைத் குமார்
கலை இயக்கம்: அசோக் குமார்
எடிட்டிங்: RC பிரணவ்
சிஇஓ: வாசு போதினி
மக்கள் தொடர்பு : யுவராஜ்

Related Posts