“மை டியர் டாலி” தயாரிப்பாளரின் அதிரடி அறிவிப்பு!

“மை டியர் டாலி” தயாரிப்பாளரின் அதிரடி அறிவிப்பு!

வி.ஜே.பப்பு மற்றும் அனுபமா இணைந்து நடித்துள்ள “மை டியர் டாலி” திரைப்படம் இன்று உலகமெங்கும் வெளியாகியுள்ளது. அரவிந்த் ராஜ் எழுதி இயக்கியுள்ள இத்திரைப்படத்தை, சிம்ம மூர்த்தி சினிமாஸ் சார்பில் ஜெயராமசந்திரன் மற்றும் எம்.ஜே.சிவராமகிருஷ்ணா தயாரித்துள்ளனர். இப்படத்தில் இரத்தப் புற்றுநோய் குறித்த விழிப்புணர்வு காட்சிகள் இடம்பெற்றுள்ள நிலையில், படத்தின் மொத்த வசூலில் ஒரு பகுதியை புற்றுநோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளின் சிகிச்சைக்காக வழங்கப்போவதாக தயாரிப்பாளர் சிவராமகிருஷ்ணா அறிவித்துள்ளார்.

இப்படத்தில் கே.பி.ஒய். ராஜவேலு, சுதா, தாரா, கீர்த்தனா, ஆஷா, ராஜாமணி, பேபி தீக்ஷிதா, டொமினிக் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். பாலாஜி கே சேகரின் ஒளிப்பதிவில், சித்தார்த்தின் படத்தொகுப்பில் உருவாகியுள்ள இப்படத்திற்கு எம். ஃபாஸில் இசையமைத்துள்ளார். நிர்வாக தயாரிப்பை ஆர்.திருமலை கவனித்துள்ளார். திரையில் விழிப்புணர்வு ஏற்படுத்துவதோடு நில்லாமல், வருவாயைப் பகிர்ந்து கொள்ள முன்வந்துள்ள தயாரிப்பாளரின் இந்த மனிதாபிமானச் செயல் திரைத்துறையினரிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

Related Posts