கடல் நகரம் முதல் காற்று நகரம் வரை சண்டைக் காட்சிகள்!: ‘மிஸ்டர் எக்ஸ்’ ரிலீஸ் தேதி அறிவிப்பு!
‘சர்தார்’, ‘லப்பர் பந்து’ என அடுத்தடுத்து ஹிட் படங்களைக் கொடுத்த பிரின்ஸ் பிக்சர்ஸ் மற்றும் மேவரிக் மூவிஸ் கூட்டணி தயாரிக்க, தனது முதல் படைப்பான ‘எப்.ஐ.ஆர்.’ படத்திலேயே திரும்பிப் பார்க்க வைத்த மநு ஆனந்த் இயக்கத்தில் உருவாகி இருக்கிறது ‘மிஸ்டர் எக்ஸ்’.
இந்த ஆக்ஷன் த்ரில்லர் வேட்டையில் ஆர்யா கதாநாயகனாக மிரட்ட, அவருடன் கௌதம் கார்த்திக், சரத்குமார், மஞ்சு வாரியர் என நட்சத்திர பட்டாளமே களம் இறங்கியுள்ளது. மேலும், அனகா, அதுல்யா ரவி, ரைசா வில்சன், காளி வெங்கட் மற்றும் ஜெயப்ரகாஷ் என ஒரு பெரிய டீமே படத்தில் இருக்கிறது.
திபு நிபுணன் தாமஸின் இசை படத்திற்குப் பலம் சேர்க்கிறது.
தமிழ்நாட்டின் கடல் நகரங்களில் ஒன்றான தூத்துக்குடியில் துவங்கி பக்கத்தில் பாண்டிச்சேரி என ஆரம்பித்து ஜெய்ப்பூர், குலுமணாலி, மும்பை, என இந்தியா முழுதும் பயணப்பட்டு சண்டைக்காட்சிகள் படமாக்கி இருக்கிறார்கள். அதோடு காற்று நகரம் என அழைக்கப்படும் அசர்பைஜான் நாட்டு தலைநகரான பாகு நகரிலும் முக்கிய காட்சிகள் எடுக்கப்பட்டுள்ளன.
“ஏப்ரல் 17-ம் தேதி உலகெங்கும் தியேட்டர்களில் வெளியாகும் ‘மிஸ்டர் எக்ஸ்’, கோடை விடுமுறைக்கு ஒரு செம ட்ரீட்டாக அமையப்போவது உறுதி! ” என்று நம்பிக்கையுடன் சொல்கின்றனர் படக்குழுவினர்.

