‘மைக் (டைசன்)’ மோகனின் ‘ஹரா’: ஜூலை 5 முதல் அமேசான் ஓ..டி.டி.யில்!

‘மைக் (டைசன்)’ மோகனின் ‘ஹரா’: ஜூலை 5 முதல் அமேசான் ஓ..டி.டி.யில்!

விஜய் ஸ்ரீ இயக்கத்தில், வெள்ளி விழா நாயகன் மோகன் நீண்ட காலத்துக்குப் பிறகு, நடித்து சமீபத்தில் வெளியான திரைப்படம், ‘ஹரா’.

விஜய் ஸ்ரீ ஜி இயக்கிய இத் திரைப்படத்தில்அனுமோல், யோகி பாபு, சாருஹாசன், வனிதா விஜயகுமார் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் தோன்றினர்.

பல வருடங்கள் கழித்து மீண்டும் மோகன் ஹீரோவாக நடித்துள்ள நிலையில், முதல் நாளே அவரை பார்க்க ரசிகர்களை விட அதிகளவில் ரசிகைகள் தியேட்டருக்கு குவிந்தனர். இந்தப் படத்தில் மோகன், ஆக்‌ஷன் ஹீரோ அவதாரம் எடுத்துள்ளது, அனைவரையும் கவர்ந்தது. ‘மைக் மோகன், மைக் டைசன் மோகன் ஆகிவிட்டார்’ என பலரும் பாராட்டினர்.வெறும் ஆக்சன் படமாக மட்டும் இல்லமல், அப்பா – மகள் பாசம் என்கிற சென்டிமெண்ட், மருந்து மாபியாக்களை தோலுரித்து காட்டிய மெஸேஜ், அனைவரும் சட்டம் தெரிந்திருக்க வேண்டும் என வலியுறுத்தியது என இயக்குநர் விஜய் ஸ்ரீ ஜியின் கருத்துக்களை மக்கள் ஏற்றனர்.

இதனால் படம்,  வெற்றிபெற்றது.

இந்த நிலையில், வரும் ஜூலை 5ம் தேதி முதல், ஹரா திரைப்படம் அமேசான் ஓ.டி.டி. தளத்தில் ஸ்ட்ரீமிங் ஆகிறது.

இது ரசிகர்களுக்கு மேலும் மகிழ்ச்சியை அளித்துள்ளது.

Related Posts