அதிசய பெட்டி.. அதிரடி திட்டம்!: ஹரி உத்ராவின் ‘மாஸ்டர் பிளான்’ ஃபர்ஸ்ட் லுக் கலக்கல்!

அதிசய பெட்டி.. அதிரடி திட்டம்!: ஹரி உத்ராவின் ‘மாஸ்டர் பிளான்’ ஃபர்ஸ்ட் லுக் கலக்கல்!

பிளாக் ஹூமர், ஃபேண்டஸி, குடும்பக் கூத்து என அத்தனை சுவாரஸ்யங்களையும் ஒன்றாகக் கலந்து கட்டி வரவிருக்கிறது ‘மாஸ்டர் பிளான்’ திரைப்படம். உத்ரா புரொடக்ஷன்ஸ், டிஜே இன்டர்நேஷனல் மற்றும் தியா ஃபிலிம்ஸ் இணை தயாரிப்பில், செ. ஹரி உத்ரா எழுதி, இயக்கி, தயாரிக்கும் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் தற்போது வெளியாகி இணையத்தில் அசுரத்தனமான வரவேற்பைப் பெற்று வருகிறது.

ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் எப்படி இருக்கு?

பழமையான வீட்டின் பின்னணியில், பொன்னிற ஒளி வீசும் ஒரு மர்மப் பெட்டியை ஒரு வயதான பாட்டியும் சிறுவனும் கையில் ஏந்தி நிற்கிறார்கள். சுற்றிலும் இருக்கும் குடும்ப உறுப்பினர்களின் முகத்தில் ஆச்சரியம், பயம், பதற்றம் என அத்தனை உணர்ச்சிகளும் கொட்டிக்கிடக்கின்றன. சிதறிக்கிடக்கும் பணக்கட்டுகள், கையில் இருக்கும் துப்பாக்கி என போஸ்டரே ஒரு செம திரில்லர் ஃபீலைக் கொடுக்கிறது. அந்த மாயப்பெட்டிதான் கதையின் மாபெரும் திருப்புமுனையாக இருக்கும் என்பதை இந்த காட்சியமைப்பு அழுத்தமாக உணர்த்துகிறது.

கதைக்களம் என்ன?

தகுதிக்கு மீறிய சொகுசு வாழ்க்கையை வாழ ஆசைப்படும் ஒரு நடுத்தரக் குடும்பம், அதனால் வரும் சிக்கல்களில் எப்படிச் சிக்கிச் சின்னப்பின்னமாகிறது, அதிலிருந்து ஃபேண்டஸி மற்றும் நகைச்சுவை பாணியில் எப்படி மீண்டு வருகிறது என்பதே படத்தின் கதை! ‘கோலமாவு கோகிலா’, ‘டாக்டர்’, ‘டூரிஸ்ட் ஃபேமிலி’ படங்களின் பாணியில் அட்டகாசமான பிளாக் ஹூமர் விருந்தாக இது அமையவுள்ளது.

நட்சத்திரப் பட்டாளம் & தொழில்நுட்பக் குழு:

  • நாயகன் – நாயகி: தருண் விஜய், பிக்பாஸ் புகழ்பெற்ற அக்‌ஷரா ரெட்டி

  • நட்சத்திரங்கள்: பாவல் நவகீதன், திவ்ய ஜகத், அப்புகுட்டி, தீபா சங்கர், தேனப்பன், சம்பத் ராம், கஜராஜ்

  • எழுத்து, இயக்கம், தயாரிப்பு: செ. ஹரி உத்ரா

  • வசனம்: செ. ஹரி உத்ரா, P. ரஞ்சித் குமார்

  • ஒளிப்பதிவு: K.S. பழனி

  • இசை: A.J. அலி மிர்சாக்

  • படத்தொகுப்பு: பிரசாந்த், S.B. ராஜா

  • கலை இயக்கம்: எட்வர்ட் கென்னடி

  • சண்டைப்பயிற்சி: கனல் V. கண்ணன், கனல் S. குகன்

  • நடனம்: I. ராதிகா, ராஜேஷ் கிறிஸ்டி

  • பாடல் வரிகள்: மோகன் ராஜன், கவிஞர் சாரதி

  • நிர்வாக தயாரிப்பாளர்கள்: மனோவ் செல்வராஜ், தனகோபால், M. விஸ்வநாதன், சேட்டு K

  • இணை தயாரிப்பாளர்கள்: பாலகங்காதரன், திவ்யா ஜகத், ஜனார்த்தனன் V.

  • மக்கள் தொடர்பு: சதீஷ் (AIM)

தேனி, விழுப்புரம், செஞ்சி ஆகிய பகுதிகளில் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், அடுத்தடுத்த சர்ப்ரைஸ் அறிவிப்புகளுக்காக ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கிறார்கள்!

Related Posts