மதராஸி: விபத்தில் சிவகார்த்திகேயன் விரல் துண்டானது!: ஏஆர் முருகதாஸ் பகீர் தகவல்!

மதராஸி: விபத்தில்  சிவகார்த்திகேயன் விரல் துண்டானது!:  ஏஆர் முருகதாஸ் பகீர் தகவல்!

சிவகார்த்திகேயன் நடிப்பில், இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘மதராஸி’ திரைப்படம் செப்டம்பர் 5-ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.   தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரங்கள் இணைந்துள்ள இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா, பல சுவாரசியமான தகவல்களை படக்குழுவினர் பகிர்ந்துகொண்டனர்.

விழாவில் பேசிய இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ், ப “இந்த படத்துக்கு அனிருத்னு இன்னொரு ஹீரோ இருக்காரு. நான் தனிமையக ஃபீல் பண்ணும்போது, விக்ரம் படத்தோட பிஜிஎம்-தான் கேட்பேன். விஜய் சார்கூட வேலை பார்க்கும்போது, அவர்கிட்ட இருந்து டயலாக் வேற மாதிரி கிடைக்கும், அதே மாதிரிதான் அனிருத். நிறைய படங்கள்  அவரோட இசையால வெற்றி பெற்றிருக்கு. இந்த படத்துக்கு உங்க இசை பெரிய மகுடமாக இருக்கும்.மாலதி கதாபாத்திரத்துக்கு ருக்மிணி உயிர் கொடுத்திருக்காங்க. அய்யப்பனும் கோஷியும் படத்தை பார்த்த பிறகுதான் பிஜு மேனன் இந்த படத்துக்குள் வந்தார். அவரது அற்புதமான கதாபாத்திரத்துக்கு அவர் உயிர் கொடுத்திருக்கார்

என்னுடைய உதவியாளர்களில் 12 பேர் இப்போது இயக்குநர்களாக இருக்காங்க. ஒரு டீம்ல நிறைய பேர் விளையாடுவாங்க, ஆனால் கப் வாங்குறது ஒருவர்தான். அப்படி எனக்குப் பின்னாடி பலரும் இந்த படத்துக்காக உழைச்சிருக்காங்க.

இலங்கையில் படப்பிடிப்பை நடத்தியபோது, பயங்கரமான புயல் வீசியது. அப்போது, ஒரு காட்சிக்காக உயரமான இடத்தில் இருந்து சிவகார்த்திகேயன் குதிக்கும்போது, அவரைவிட உயரமாக நின்றிருந்த ஒளிப்பதிவாளர், புயல் காற்றால் ட்ரோன் கேமரா யார் மீதும் மோதிவிடக் கூடாது என்று ஓடிப் போய் அதைப் பிடித்தார். அப்போது பிளேடு அவரது கையில் பட்டு விரல் தனியாக வந்துவிட்டது. நாங்கள் ஓடிப் போய் அவரது விரலைத் தேடிக் கண்டுபிடித்துக் கொடுத்தோம். விரலைச் சேர்த்த பிறகு, அடுத்த நாளே அவர் மீண்டும் படப்பிடிப்புக்கு வந்துவிட்டார்” என்றார் ஏ.ஆர்.முருகதாஸ்.

 

Related Posts