குமார சம்பவம்: திரை விமர்சனம்

வீனஸ் இன்ஃபோடெய்ன்மென்ட் நிறுவனம் சார்பில் கே.ஜி. கணேஷ் தயாரிக்க , ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ தொலைக்காட்சித் தொடரின் நாயகன் குமரன் தங்கராஜ் நடிக்க பாயல் ராதா கிருஷ்ணா, ஜி.எம். குமார், குமரவேல், பால சரவணன், வினோத் சாகர், லிவிங்ஸ்டன், சிவா அரவிந்த், வினோத் முன்னா, தாரிணி, கவிதா உள்ளிட்ட பலர் நடித்து உள்ளனர். பாலாஜி வேணுகோபால் எழுதி இயக்கி இருக்கிறார். மக்களுக்கா போராடும் சமூகப் போராளி, குமாரவேல். அவருக்கு தனது வீட்டை வாடகைக்கு அளித்து நட்பு பாராட்டுகிறார் ஜி.என்.குமார். ஜி.என். குமாரின் பேரன் பேத்திகளை தனது பிள்ளைகளாக நினைக்கிறார் குமார வேல். ஆனால் பேரனான குமரன் தங்கராஜ், மதிப்பதே இல்லை.
இந்த நிலையில் குமாரவேல் மர்மமான முறையில் இறந்து கிடக்கிறார். அவரது இறப்பு கொலையா.. அப்படியானால் காரணம் யார் என துப்பறிய ஆரம்பிக்கிறார் நாயகன் குமரன் தங்கராஜ்.
குற்றவாளிகளைக் கண்டு பிடித்தாரா என்பதே கதை.
நாயகன் குமரன் தங்கராஜ் நடிப்பு பரவாயில்லை. ஆனால் தொலைக்காட்சித் தொடரின் தாக்கத்தைக் குறைத்தால் இன்னும் ரசிக்க வைப்பார். அவரது நண்பராக வரும் பால சரவணன், வழக்கம்போல காமெடியாக பேசி உடன் வரும் நல்ல நண்பன். சமூகப் போராளியாக வரும் குமரவேல் வழக்கம்போல் மீட்டருக்கு ஒஞ்சம் அதிகமாக நடிக்கிறார். மற்றும் பலர் நடித்து உள்ளனர். அவ்வளவுதான்.
ஜெக்தீஷ் ஒளிப்பதிவு பரவாயில்லை ரகம். இசையும் அதே கேட்டகிரிதான். .
இயக்குனர் பாலாஜி வேணுகோபால், ஏதோ வித்தியாசமாக சிந்தித்து வித்தியாசமாக படம் தரவேண்டும் என நினைத்து இருப்பது புரிகிறது. ஆனால் அதன்படி படம் வித்தியாசமாக இருக்க வேண்டாமா.. குறைந்தபட்சம் இயல்பாக இருந்தாலே போதுமே.
கொலை, துப்பறிதல் என்றெல்லாம் ஆரம்பித்து அதை அவல நகைச்சுவையாக முடித்திருக்கிறார்.
நம்ப முடியாத – நாடக பாணி காட்சிகள்.
வேறு ஒன்றும் சொல்வதற்கு இல்லை.