கொம்பு சீவி: திரை விமர்சனம்: கூர்மை குறைவு!

கொம்பு சீவி: திரை விமர்சனம்: கூர்மை குறைவு!

ஸ்டார் சினிமாஸ் தயாரிக்க, பொன்ராம் இயக்கத்தில்  சண்முகபாண்டியன், சரத்குமார், தார்ணிகா, முனிஸ்காந்த், காளிவெங்கட் உள்ளிட்டோர் நடித்திருக்கும் படம்.  ஒளிப்பதிவு: பாலசுப்ரமணியெம் இசை: யுவன்ஷங்கர்ராஜா வெளியான தேதி: டிசம்பர், 19, 2025  படத்தின் நேரம்: 2 மணிநேரம் 19 நிமிடங்கள்

ஒன்லைன்:

1990-களின் பின்னணியில், தேனி மாவட்டத்தின் மண் வாசனையுடன் ஒரு ஆக்ஷன் டிராமா. வைகை அணை கட்டுமானத்தால் வாழ்வாதாரத்தை இழந்த மக்களின் அவல நிலையைச் சொல்லித் தொடங்குகிறது படம். ஆனால், அந்தப் பாதிப்பிலிருந்து மீள ‘பெரிய மனிதர்’ சரத்குமாரும், அவர் மருமகன் சண்முகபாண்டியனும் கஞ்சா கடத்தலில் இறங்குவது தான் படத்தின் விசித்திரமான முடிச்சு.

நடிப்பு எப்படி?

  • சண்முகபாண்டியன்: முந்தைய படங்களை ஒப்பிடும்போது, இதில் கிராமத்து இளைஞனாக நல்ல முன்னேற்றத்தைக் காட்டியுள்ளார். ஆக்ஷன் மற்றும் காதல் காட்சிகளில் ஓரளவுக்கு ஸ்கோர் செய்தாலும், இன்னும் கூடுதல் எனர்ஜியைக் காட்டியிருக்கலாம்.

  • சரத்குமார்: ‘மாமா’ கதாபாத்திரத்தில் அதிரடி காட்ட முயன்றிருக்கிறார். ஆனால், அவரது முந்தைய படமான ‘டியூட்’ (Dude) படத்தில் இருந்த அந்த இயல்பான மேஜிக் இதில் மிஸ்சிங். செயற்கையான மேக்கப்பும், கெட்-அப்பும் அவருக்குச் சற்று பின்னடைவு.

  • தார்ணிகா: போலீஸ் அதிகாரியாக மிடுக்காகத் தெரிகிறார்; ஒரு பாடலில் மட்டும் ரசிகர்களைக் கவர்கிறார்.

  • இதர கலைஞர்கள்: முனிஸ்காந்த், காளிவெங்கட் என ஒரு பெரும் காமெடி பட்டாளமே இருந்தும், அவர்கள் செய்யும் கலாட்டாக்கள் சிரிப்பை வரவழைக்கத் தவறிவிட்டன.

தொழில்நுட்பம்:

  • ஒளிப்பதிவு (பாலசுப்ரமணியம்): படத்தின் மிகப்பெரிய பலம் தேனியின் அழகைப் படம் பிடித்த கேமரா தான். காட்சிகள் ஒவ்வொன்றும் கண்களுக்குக் குளிர்ச்சி.

  • இசை (யுவன் ஷங்கர் ராஜா): யுவனின் மேஜிக் இந்தப் படத்தில் பெரிய அளவில் வேலை செய்யவில்லை. பின்னணி இசை கதையுடன் ஒட்டாமல் விலகி நிற்கிறது; பாடல்களும் ‘பரவாயில்லை’ ரகம் தான்.

இயக்கம் :

இயக்குநர் பொன்ராமின் வழக்கமான ‘கலகலப்பு’ இந்தப் படத்தில் கொஞ்சம் காணாமல் போயிருக்கிறது. விவசாயம் செய்ய வழியில்லை என்பதால் கஞ்சா வியாபாரத்தைச் செய்வது போன்ற லாஜிக்கை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. போதைப்பொருள் தடுப்பு வாசகங்கள் கூட படத்தில் சரியாக இடம்பெறவில்லை என்பது ஒரு பலவீனம்.

ஃபைனல் கமெண்ட்: ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’ தந்த பொன்ராமிடம் இருந்து ஒரு ‘பிரெஷ்’ ஆன காமெடியை எதிர்பார்த்துச் சென்றால், சற்றே ஏமாற்றம் தான் மிஞ்சுகிறது. திரைக்கதையில் இன்னும் கொஞ்சம் ‘கொம்பு சீவி’ கூர்மையாக்கி இருக்கலாம்!

ரேட்டிங்: 2 .9/ 5

Related Posts