கிஸ் – திரைப்பட விமர்சனம்

கிஸ் – திரைப்பட விமர்சனம்

ரோமியோ பிக்சர்ஸ் தயாக்க, சதீஷ் கிருஷ்ணன் இயக்கத்தில் கவின், பிரீத்தி அஸ்ராணி  உள்ளிட்டோர் நடித்திருக்கும் படம், கிஸ். நாயகனான கவினுக்கு வித்தியாசமான ஒரு சக்தி இருக்கிறது. காதலர்கள் முத்தம் கொடுத்துக் கொள்வதைப் பார்த்தால் அதன் பிறகு அவர்களின் எதிர்காலத்தை பார்க்கக் கூடியவராக இருக்கிறார். இந்த சக்தி கவினின் காதல் வாழ்க்கைக்கு பிரச்சனையாக உருவாகிறது. தன்னுடைய காதலை காப்பாற்றிக் கொள்ள கவின் தனது விதியை எதிர்த்து போராட வேண்டிய நிலை. தனது காதலையும் துறக்கிறார். அதன் பிறகு என்ன ஆனது என்பதே கதை.

அவரது இந்த முடிவு ஆர்வக்கோளாறா? அல்லது தகுதியானதா? என்பதை பட மாளிகையில் ‘கிஸ்’ அடித்து விட்டு… சாரி.!? ‘கிஸ்’ படத்தை பார்த்துவிட்டு, ரசிகர்கள் சொல்வதை காண்போம்.

நாயகன்  கவின் சிறப்பாக நடித்து இருக்கிறார்.  காதல் உணர்வை மட்டுமின்றி,  காதலை துறக்க வேண்டிய நிலையில் வெளிப்படுத்தும் சோகத்தையும் சிறப்பாக வெளிப்படுத்தி இருக்கிறார். நடனக் காட்சியிலும் முத்திரை பதிக்கிறார்.

அவரது காதலி – நாயகியாக – ப்ரீத்தி அஸ்ராணி நடித்து உள்ளார்.  அழகான தோற்றம், அழகான நடிப்பு, அழகான நடனம்.. வாழ்த்துகள்.நாயகனின் பெற்றோராக நடித்து இருக்கும்  ராவ் ரமேஷ் மற்றும் தேவயானி ஆகியோர் இயல்பான நடிப்பை  அளித்து இருக்கின்றனர்.  நாயகியின் தந்தையாக வரும் கௌதமின் நடிப்பும் பரவாயில்லை.

ஹரிஷ் கண்ணனின் ஒளிப்பதிவு, வண்ணமயமாக காட்சிகளை அளித்து இருக்கிறது.  இளமை ததும்பும் காட்சிகளுக்கு மேலும் உற்சாகம் அளிக்கிறது.

ஜென் மார்டின் இசையில் பாடல்களும், பின்னணி இசையும்ஈர்க்கின்றன.

ஆர்.சி.பிரனாவின் எடிட்டிங் கச்சிதம்.

இயக்குநராக அறிமுகமாகியிருக்கும் நடன இயக்குநர் சதீஷ் கிருஷ்ணன்,  இளைஞர்களுக்கான துடிப்பான படத்தை அளித்து இருக்கிறார்.  இளசுகள் மட்டுமின்றி பெரியவர்களும் பார்த்து ரசிக்கலாம்.

Related Posts