கரூர்: பள்ளியில் ஆய்வுக் கட்டிடத்தை திறந்து வைத்தார் முதலமைச்சர் ஸ்டாலின்

கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி தொகுதி, புன்னம் அரசு ஆதிதிராவிடர் நல மேல்நிலைப் பள்ளி சிறப்பாக செயல்பட்டு வருகிறது. இங்கு ரூ.55 இலட்சம் செலவில் புதிதாக அறிவியல் ஆய்வுக் கூட்டம் கட்டப்பட்டது. இதை தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் காணொளி காட்சி மூலம் திறந்து வைத்தார்.
அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதி உறுப்பினர் இளங்கோவன், கரூர் மாவட்ட ஆட்சியர் தங்கவேலு, மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் சக்திய பால கங்காதரண் ஆகியோர் குத்து விளக்கு ஏற்றி வைத்தனர்.
விழாவில் பள்ளி தலைமை ஆசிரியர் தங்கவேலு, ஆசிரியர்கள், மாணவ, மாணவியர்கள், மாணவர்களின் பெற்றோர்கள் மற்றும் உள்ளூர் பிரமுகர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.