‘காட் மேனு’க்கு ஒரு நீதி.. ‘கம்பி கட்ன கதை’க்கு ஒரு நீதியா?: டி.வி.சோமு

ஜீ5 தயாரிப்பில், பாபு யோகேஸ்வரன் இயக்கத்தில் உருவானது காட்மேன் என்ற வெப் சீரிஸ்.  இதில் டேனியல் பாலாஜி, ஜெய் பிரகாஷ், சோனியாக அகர்வால் ஆகியோர் நடித்து இருந்தனர்.

கடந்த 2020ம் ஆண்டு,  இந்த சீரிசின் டிரெய்லர் வெளியானது. உடனே இதை “சிலர்” பெரும் சர்ச்சையாக்கினர்.

“இத்தொடரின் டீசர், ஒட்டுமொத்த இந்து மதத்தை அவமதிக்கிறது. இதை தடை செய்ய வேண்டும்” என்று ஆவேச குரல் எழுப்பினர். “சிலர்” தமிழ்நாடு முழுதும் பல காவல் நிலையங்களில், இத்தொடருக்கு எதிராக புகார் அளித்தனர்.

குறிப்பாக அரசியல் பிரமுகர்  சுப்பிரமணியம் சுவாமி, இத்தொடருக்கு கடும் கண்டனம் தெரிவித்தார். நடிகர் எஸ்.வி.சேகரும், சென்னை காவல்துறை ஆணையாளரிடம் புகார் அளித்தார்.

தமிழக பாஜக சட்டப்பிரிவு மாநிலச் செயலாளர் அஸ்வத்தாமன் சார்பில் சென்னை காவல்துறை ஆணையாளர் அலுவலகத்தில் “காட்மேன் வெப் தொடரில் பிராமணர்களை பற்றியும், இந்து மதத்தைப் பற்றி அவதூறான கருத்து  இடம் பெற்றுள்ளன. வெப் தொடரின் படத்தின் இயக்குநர், தயாரிப்பாளர், நடிகர்கள், ஸீ 5 நிர்வாக இயக்குநர் ஆகியோர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்!” என புகார் அளிக்கப்பட்டது.

இந்து தமிழர் கட்சியின் தலைவர் ராம.ரவிக்குமார், “ இந்து மத நம்பிக்கைகளை கொச்சைப்படுத்தும் இத்தொடரின் தயாரிப்பாளர் இயக்குனர் மற்றும் படத்தை வெளியிடக் கூடிய தொலைக்காட்சி ஊடகம் ஆகியவற்றின் மீது சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், சர்ச்சைக்குரிய காட்சிகள் மற்றும் வசனங்களை நீக்க வேண்டும். இல்லாவிட்டால் தொலைக்காட்சியின் முன்பு போராட்டம் நடத்தப்படும்!” என என்றும் எச்சரிக்கை விடுத்தார்.

“380 நிமிட தொடர் இது. ஒரு நிமிட வீடியோவைப் பார்த்து முடிவு செய்யாதீர்கள்” என ஸீ 5 நிறுவனம் எவ்வளவோ சொல்லிப் பார்த்தது.

கடைசியில்,  எதிர்ப்புகளுக்கு பயந்து, அத்தொடரே நிறுத்தி வைப்பதாக அறிவித்தது.

அதுமட்டுமல்ல..  இத்தொடரின் டீசர், யூ டியுபில் இருந்து நீக்கப்பட்டது.

காட்மேன் தொடர் காட்சி…

இதையடுத்து, காட்மேன் வெப் தொடரை தயாரித்த நிறுவனம், ” தமிழத்தில் உள்ள “சிலர்” , ஒரு ஆர்மியை போல் மாநிலத்தில் உள்ள அனைத்து காவல் நிலையங்களிலும் இந்த நிகழ்ச்சியை ரத்து செய்யக் கோரி கிரிமினல் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

 மேலும் இந்த வெப் சீரிஸின் தயாரிப்பாளர் மற்றும் இயக்குநரை உலகின் பல பகுதிகளில் இருந்தும் பிராமண மக்கள் கடந்த 4, 5 நாட்களாக இரவு பகலாக போனில் கேவலமான வார்த்தைகளில் திட்டி வருகின்றனர்.

தவிர காட்மேன் வெப் சீரிஸின் தயாரிப்பாளர் ஒரு கிறிஸ்டியன், அதனால் தான் இந்து மதத்தை அவமதிக்கும் வகையில் இப்படி ஒரு வெப்சீரிஸை எடுத்துள்ளார் என்ற வதந்திகளும் பரவி வருகிறது. மேலும் அவர் கோவையில் உள்ள கோவிலில் பன்றி இறைச்சியை வீசியதாகவும் ஒரு தவறான பதிவு சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. உரிமையை பறிக்கிறது மத்தியில் அதிகாரம் செலுத்தும் சுப்பிரமணிய சுவாமியின் ஆதரவாளர்கள் சிலர் ஜீ5 நிர்வாகிகளை, இந்த வெப் சீரிஸை நிறுத்துமாறு மிரட்டியுள்ளனர்.

இந்த டீசரில் இடம்பெற்றுள்ள வசனங்களின் உண்மை தன்மை, சீரிஸின் கதை என்பது பற்றி புரிதல் இல்லாமல், இது பிராமண சமூகத்திற்கு எதிரானது எனக்கூறி தடைக்கோருவது கருத்துச் சுதந்திர உரிமையை முற்றிலுமாகப் பறிக்கிறது. இது ஒரு பயங்கரவாத செயல்,

காட்மேன் சீரிஸ் தடைசெய்யப்படுமேயானால் படைப்பு சுதந்திரம் கேள்விக்குறியாகிவிடும். ஒரு வேளை காட் மேன் சீரிஸுக்கு தடை விதிக்கப்பட்டால் இனி யார் வேண்டுமானாலும் தலையிட்டு எந்தப் படைப்பையும் திரைக்கு வரும் முன் தடுத்து நிறுத்திவிடலாம் என்னும் நிலை ஏற்படும். படைப்பு சுதந்திரத்திற்கு எழும் ஆபத்தை திரையுலகத்தினர் ஒன்று சேர்ந்து தடுக்க வேண்டும். எனவே அதனை தடுக்க இந்திய தகவல் ஒளிபரப்புத்துறை அமைச்சகத்துக்கும் பிரதமரின் அலுவலகத்துக்கும் தமிழக முதலமைச்சரின் கவனத்துக்கும் கொண்டு ‘காட்மேன்’ வெப்சீரீஸ் தனியார் ஓடிடி தளத்தில் வெளியாவதற்கான கோரிக்கையை கொண்டு செல்லப்படும்” என்று தெரிவித்தது.

அப்படியும் தொடரை வெளியிடவில்லை ஸீ 5 நிறுவனம்.

இத்தொடரை எதிர்த்தவர்கள், “இந்து மதத்தைப் புண்படுத்துகிறது” என்று காரணம் சொன்னார்கள் அல்லவா…
கம்பி கட்ன கதை படக் காட்சி
நாளை மறுநாள், “கம்பி கட்ன கதை” என்கிற தலைப்பில் நட்டி நடித்த படம் வெளியாகிறது. இதுவும் ஒரு இந்து சாமியாரை குறிவைத்து எடுக்கப்பட்ட படம்தான்.
ஆனால் எந்தவித எதிர்ப்பும் கிளம்பவில்லை.. ஒன்றிய பாஜகவின் கைப்பாவையாக செயல்பட்டு பல படங்களை தடை செய்யும் – வெட்டித்தள்ளும் சென்சார் போர்டு, இந்தப் படத்தை அனுமதித்து இருக்கிறது.
ஆச்சரியமாக இருக்கிறதா…
விசயம் இதுதான்…
காட்மேன் தொடரில் முதன்மையான கதாபாத்திரமாக காண்பிக்கப்பட்வர் சங்கராச்சாரி போன்ற தோற்றத்தில் இருந்தவர்.  ஆகவே அத்தொடரை எதிர்த்த  “சிலர்”,  “இந்தத் தொடர் இந்து மதத்தை இழிவுபடுத்துகிறது” என்பதோடு, “பிராமண சமுதாயத்தையும் தரம் தாழ்த்தி பேசுகிறது”  என்றனர்.  ஆம்.. எதிர்த்தவர்கள் பிராமணர்கள். ஆகவே அத்தொடர் நிறுத்திவைக்கப்பட்டுள்ளது… இன்று வரை.
ஆனால், “கம்பி கட்ன கதை”  திரைப்படத்தில் நித்தியானந்தாவை குறிப்பிட்டு இருக்கிறார்கள். (அவரது தீவின் பெயர் பொய்லாசா). ஆனால் எந்தவித எதிர்ப்பும் இல்லை.
நமக்கு சாதி நம்பிக்கை இல்லை. அதே நேரம் பிராமணர்களிடையே இருக்கும் ஒற்றுமை, (நித்தியானந்தா சார்ந்த) முதலியார் சமூகத்துக்கு ஏன் இல்லை என்கிற கேள்வியும் எழுகிறது. ஆம்..தான் முதலியார் சாதியைச் சேர்ந்தவன் என்று நித்தியே சொல்லி இருக்கிறார்.
இன்னொரு விசயம்..
ஆக, அவர்களைப் பொறுத்தவரை, எல்லோரும் இந்து என்பார்கள் ஆனால், சங்கராச்சாரிக்கு ஒரு நீதி.. நித்தியானந்தாவுக்கு ஒரு நீதி.
நமக்கு சம நீதிதான்.. எந்த சாமியாரை அம்பலப்படுத்தினாலும் வாழ்த்துவோம்.
ஆகவே, கம்பி கட்ன கதை படத்தை அனைவரும் பார்த்து ரசித்து சிரிக்கலாம், சிந்திக்கலாம்!
– டி.வி.சோமு
# முழு விமர்சனம்:

Related Posts