‘காட்டான்’: விமர்சனம்: மர்ம முடிச்சுகளும் மக்கள் செல்வனின் மாஸ் நடிப்பும்!

‘காட்டான்’: விமர்சனம்: மர்ம முடிச்சுகளும் மக்கள் செல்வனின் மாஸ் நடிப்பும்!

ஜியோ ஹாட்ஸ்டாரில் இன்று (மார்ச் 27) ரிலீஸாகியிருக்கும் ‘காட்டான்’ வெப் சீரிஸ், ஒரு அதிரடியான டார்க் த்ரில்லர் விருந்து! இந்தத் தொடரின் அதிரடி விமர்சனம் :

கதைக்களம் அமைதிப்பூங்காவாக இருக்கும் அந்த கிராமத்தில் பல வருஷமா ஒரு பெட்டிஷன் கூட வரல. இதனாலேயே அங்க இருக்குற போலீஸ் ஸ்டேஷனை மூடுற முடிவுக்கு வர்றாங்க மேலதிகாரிகள். ஆனா, அந்த நேரத்துலதான் இடியாய் இறங்குது ஒரு மரண கேஸ்! முத்து என்பவரோட ‘தலை’ மட்டும் போலீஸ் கையில் சிக்க, ஊரே அதிருது. அந்த முத்து யாரு? அவரை கூறு போட்டு கொன்னது யாரு? இந்த மர்ம முடிச்சுகளை அவிழ்க்கிறதுதான் ‘காட்டான்’ வெப் சீரிஸின் விறுவிறுப்பான மீதிக்கதை.

மிரட்டலான நடிப்பு கொல்லப்பட்ட முத்து கேரக்டரில் ‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதி! வழக்கம் போல அவரோட அந்த ட்ரேட் மார்க் எதார்த்த நடிப்பால் ஸ்கோர் பண்றார். அவர் பல தொழில்கள் செய்ற அந்த பிளாஷ்பேக் காட்சிகள் ஒவ்வொன்னும், “அடுத்து என்ன நடக்கும்?” அப்படிங்கிற ஆவலை எகிற வைக்குது. மிலிந்த் சோமன், சுதேவ் நாயர், இர்ஷாத் அலினு ஒரு பெரிய பட்டாளமே இருக்கு. சிங்கம்புலி, பாலாஜி சக்திவேல், முத்துக்குமார்னு ஒவ்வொருத்தரும் தங்களுக்கு கொடுத்த ரோல்ல கச்சிதமா பொருந்தியிருக்காங்க.

தொழில்நுட்ப நேர்த்தி கிராமத்து அழகையும், அந்த டார்க் த்ரில்லர் பயத்தையும் கேமராவுக்குள் கடத்தியிருக்காங்க ஒளிப்பதிவாளர்கள் என்.சண்முகசுந்தரம் மற்றும் மது நீலகண்டன். ராஜேஷ் முருகேசனின் பின்னணி இசை கதைக்கு தேவையான அந்த ‘கிரிப்’பை பக்காவா கொடுக்குது. பி.அஜித் குமார் மற்றும் எம்.மணிகண்டன் கூட்டணியில் இயக்கம் மிகத் தெளிவு.

பார்க்கலாமா? கண்டிப்பா பார்க்கலாம்! டார்க் த்ரில்லர் ஜானர் ரசிகர்களுக்கு இது ஒரு செம ட்ரீட். சஸ்பென்ஸ், எமோஷன், ஆக்ஷன்னு எல்லாமே சரியான கலவையில் இருக்கு. இன்னைக்கே ஜியோ ஹாட்ஸ்டாரில் ஸ்ட்ரீமிங் ஆகுது, மிஸ் பண்ணிடாதீங்க!

Related Posts