ஜாக்கி: மதுரைக் கெடாவின் மிரட்டல் வெற்றி!

ஜாக்கி: மதுரைக் கெடாவின் மிரட்டல் வெற்றி!

துரை என்றாலே வீரம் தான்! அந்த வீரத்தின் அடையாளமான கிடா சண்டையை மையமாக வைத்து, தமிழ் சினிமாவின் புதிய பாய்ச்சலாக வெளிவந்திருக்கிறது ‘ஜாக்கி’. இந்தியாவில் முதல் முறையாக மழைக்காட்டு மட் ரேஸ் பந்தயத்தை ‘மட்டி’ திரைப்படம் மூலம் தத்ரூபமாகக் காட்டிய இயக்குநர் டாக்டர் பிரகபல், இப்போது மதுரையின் மண் மணத்தையும், மக்களின் குணத்தையும் ஒருங்கே கோர்த்து இந்த அதிரடிப் படைப்பைப் படைத்துள்ளார்.

கடந்த ஜனவரி 23-ஆம் தேதி திரையரங்குகளில் சீறிப்பாய்ந்த ‘ஜாக்கி’, நான்கு வாரங்களைத் தாண்டியும் வெற்றிக் கொடியை நாட்டி வருகிறது. இன்றைய வேகமான சினிமா உலகில் ஒரு படம் சில நாட்களைக் கடப்பதே பெரும் சவாலாக இருக்கும் நிலையில், ரசிகர்களின் ஆரவாரத்தோடும், ஊடகங்களின் ஏகோபித்த பாராட்டுகளோடும் இப்படம் வெற்றி நடை போடுவது தமிழ் சினிமாவிற்கு ஒரு புத்துயிர் பாய்ச்சியுள்ளது. யுவான் கிருஷ்ணா மற்றும் ரிதான் கிருஷ்ணாஸ் ஆகியோரின் மிரட்டலான நடிப்பும், கதை நாயகி அம்மு அபிராமியின் எதார்த்தமான பங்களிப்பும் இப்படத்திற்குப் பெரும் பலமாக அமைந்திருக்கிறது.

சக்தி பாலாஜியின் அதிரடி இசை, உதயகுமாரின் நுணுக்கமான ஒளிப்பதிவு மற்றும் ஸ்ரீகாந்தின் நேர்த்தியான படத்தொகுப்பு எனத் தொழில்நுட்ப ரீதியாகவும் இப்படம் சிகரம் தொட்டுள்ளது. “தரமான படைப்புகளைத் தமிழ் மக்கள் எப்போதும் தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடுவார்கள்” என்பதைச் சான்றளிக்கும் விதமாக, ‘ஜாக்கி’ திரைப்படம் மதுரையின் பாரம்பரிய விளையாட்டை உலக அரங்கிற்குப் பெருமையுடன் கொண்டு சேர்த்துள்ளது. பிகே7 ஸ்டுடியோஸ் தயாரிப்பில் உருவான இந்த வீரக் காவியம், இன்னும் பல வாரங்கள் திரையரங்குகளில் முழங்கும் என்பதில் ஐயமில்லை.

Related Posts