ஜப்பான் – திரை விமர்சனம்…
ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிப்பில் ராஜு முருகன் இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் உருவாகி இன்று வெளிவந்துள்ள திரைப்படம் ஜப்பான். இந்த திரைப்படம் கார்த்தியின் 25 வது படமாகும்.
ஜப்பான் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. வித்தியாசமான கதைகளை தேர்ந்தெடுத்து நடிக்கும் கார்த்தி, ராஜு முருகன் இயக்கத்தில் எப்படி நடித்திருப்பார் என்று பார்க்கவும் ரசிகர்கள் ஆவலுடன் காத்திருந்தனர்.
இயக்குனர் ராஜுமுருகன் என்றால் தனது படங்களில் அரசியலும் கலந்து இருக்கும். தனித்துவமான கதைக்களத்தை ரசிகர்களுக்கு கொடுக்க கூடிய இயக்குனர் என்ற பெயர் அவருக்கு உண்டு. இப்படி பல எதிர்பார்ப்புகளை கொண்ட ஜப்பான் திரைப்படம் ரசிகர்களை முழுமையாக பூர்த்தி செய்ததா இல்லையா என்று விமர்சனத்தில் பார்க்கலாம்.
கொள்ளையடிப்பதில் கைதேர்ந்த நபராக இருக்கிறார் நாயகன் ஜப்பான் [கார்த்தி] இந்த சமயத்தில் ராயல் தங்க கடையில் ரூ. 200 கோடி மதிப்புடைய நகைகள் திருடு போகிறது. இவ்வளவு பெரிய திருட்டுக்கு காரணம் கதாநாயகன் தான் என போலீஸ் அவரை தேடுகிறது.
ஒரு கட்டத்தில் அவரும் போலீஸ் பிடியில் சிக்கி விடுகிறார். அந்த நகைகளை நான் கொள்ளை அடிக்க வில்லை, இந்த கொள்ளைக்கு சம்பந்தப்பட்டவன் வேறொருவன், அவன் என்னை இதில் மாட்டி விட்டு தப்பித்து விட்டான் என கூறுகிறார் ஜப்பான்.அடுத்து என்ன நடந்தது உண்மையில் அந்த நகைகளை யார் திருடினார்கள் என்பதே படத்தின் மீதி கதை.
நாயகன் கார்த்தி வழக்கமான தனது பாணியில் நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார்.மாறுபட்ட கதாபாத்திரத்தில் நடித்து கவனம் ஈர்க்கிறார். அதே போல் அவருடன் நடித்த விஜய் மில்டன், சுனில் மற்றும் வாகை சந்திரசேகர் உள்ளிட்டோரின் நடிப்பு பாராட்டுக்குறியது.
கதாநாயகியாக அனு இமானுவேல் தனது கதாபாத்திரத்துக்கு ஏற்ற நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். கே.எஸ். ரவிக்குமார் மற்றும் ஜித்தன் ரமேஷ் கதாபாத்திரத்தை சிறப்பாக நடித்துள்ளனர். வலுவாக இல்லை என்றாலும் ஓகே.
படத்தின் ஆரம்பம் விறுவிறுப்பாக ரசிகர்களை ரசிக்க வைத்துள்ளது. இரண்டாம் பாதியில் சற்று தொய்வு தான் இருந்தாலும் மனதை தொடு வைத்திருக்கிறார் இயக்குனர். மற்றபடி சுவாரஸ்யம் குறையாமல் பயணிக்கிறது ஜப்பான்.
அரசியல் வசனங்கள் பக்காவாக இருக்கிறது. கதாபாத்திரங்களின் வடிவமைப்பு பொருந்துகின்றன. ஜி.வி. பிரகாஷ் இசை, ரவிவர்மன் ஒளிப்பதிவு மற்றும் பிலோமின் ராஜ் படத்தொகுப்பு மற்றும் சண்டை காட்சிகள் படத்தின் பக்கபலமாக அமைந்துள்ளது. மொத்ததில் ஜப்பான் ரசிகர்களுக்கு விருந்தாக வந்துள்ளது.

