NETFLIX ஓடிடி தளத்தில் இந்தியன் – 2. 

NETFLIX ஓடிடி தளத்தில்  இந்தியன் – 2. 

இந்தியன் 2 திரைப்படம் NETFLIX ஓடிடி தளத்தில் எந்த தேதியில் வெளியாகிறது.

1996 ஆம் ஆண்டு ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் வெளியான திரைப்படம் இந்தியன்.

இந்த படம் வெளியாகி மக்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்றது. கிட்டத்தட்ட 28 ஆண்டுகள் கழித்து இந்தியன் படத்தின் 2 ஆம் பாகம் உருவானது.

ஷங்கர் இயக்கிய இந்திய 2 படத்தில் கமல்ஹாசனுடன் சித்தார்த், எஸ்.ஜே.சூர்யா, பிரியா பவனி ஷங்கர், ரகுல் ப்ரீத் சிங், பாபி சிம்ஹா, சமுத்திரக்கனி மற்றும் பலர் நடித்திருந்தனர்.

லைகா நிறுவனம் தயாரித்த இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்திருந்தார், படத்தின் பாடல்கள் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.

ஜூலை 1 2ஆம் தேதி உலகெங்கிலும் திரையரங்குகளில் வெளியான இந்தியன் 2 திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் சுமாரான வரவேற்பையே பெற்றது.

இந்தியன் 2 திரைப்படம் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ய தவறியது என்றே கூறலாம். சில நாட்களுக்கு முன் இந்தியன் 2 படத்தை NETFLIX ஓடிடி தளம் அதிக தொகைக்கு வாங்கியதாக தகவல்கள் வெளியானது.

இந்நிலையில், இந்தியன் 2 திரைப்படம் NETFLIX ஓடிடி தளத்தில் ஆகஸ்ட் 9 ஆம் தேதி வெளியாகும் என்ற தகவல் வெளியாகி உள்ளது.

Related Posts