‘அழகிய அசுரன்’ டி.இமான் பிறந்தநாள்!

‘அழகிய அசுரன்’ டி.இமான் பிறந்தநாள்!

இமான் இசையில், மனதை வருடும் பாடல்களுக்கு குறைச்சலே இல்லை. உருக வைக்கும், ‘கண்ணான கண்ணே..’,  மயங்க வைக்கும்  ‘அழகிய அசுரா’ எப்போதும் மனங்களில் ஒலித்துக்கொண்டே இருக்கும் அவரது பாடல்கள் பல உண்டு.

இந்த அழகிய இசை அசுரனினின் பிறந்தநாள் இன்று. ( ஜனவரி 24)

இமானுவேல் வசந்த் தினகரன்  என்கிற இமானுக்கு சிறு வயதிலேயே இசை ஆர்வம்.. ஆதித்யன் உள்ளிட்டவர்களிடம் கீபோர்ட் பிளேயராக பணி,  குட்டிபத்மினி மூலம் டிவி சீரியல்களுக்கு இசை அமைக்கும் வாய்ப்பு..  2001-ல் ‘காதலே சுவாசம்’ என்ற படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமம், தொடர்ந்து விஜய் நடிப்பில் ‘தமிழன்’ படத்தில்  இசையமைப்பாளர்.

அடுத்து வந்த விசில் திரைப்படத்தில் ‘அழகிய அசுரா’ பாடல் மூலம் அனைவரையும் ரசித்து திரும்பிப் பார்க்கவைத்தவர்.

தொடர்ந்து இன்று வரை எத்தனையோ மனதை வருடும் மெலோடிகள், குத்தாட்டம் போட வைக்கும் அதிரடி பாடல்கள் என  கோலோச்சிக் கொண்டு இருக்கிறார் இமான்.

தேசிய, மாநில அரசு விருதுகள், ரசிகர்களின் அங்கீகாரம்..

இது, இமான் அவர்களின் ரசிக்க – லயிக்க வைக்கும் இசைப்பயணம்.

இதை மீறி, அவரசு மனிதநேய பயணம் இன்னும் நம்மை நெகிழ வைக்கும்.உதாரணத்துக்காக சொல்வதென்றா், கடலூர் மாவட்டம், நெய்வேலி  அருகே, நரிக்குறவர் இன மக்கள் அறுவருக்கு  குடிசை வீடுகளும் இரவு பாடசாலையும் அமைத்துத் தந்ததை சொல்லலாம்.

பெரிய ஆடம்பரம் இல்லாமல் நடத்தப்பட்ட அந்த எளிய, அழகிய விழாவில், ‘கண்ணான கண்ணே…’ பாடலை மேடையில் பாடி இன்னும் நெகிழ வைத்தார் இமான்…அதே போல விபத்தில் ஒரே நேரத்தில் தாய், தந்தை, சகோதரி ஆகியோரை இழந்த சேலத்தைச் சேர்ந்த அமுதா என்ற மாணவியின் உயர் கல்விக்கு உதவிக்கரம் நீட்டினார். குடும்பத்தை இழந்து தவிக்கும் மாணவிக்கு உதவி கரம் நீட்டிய இசையமைப்பாளர் டி.இமான்..!

இத்தனைக்கும் அந்த மாணவி, இமானிடம் நேரடியாக உதவி கேட்கவில்லை. அரசு உதவ வேண்டும் என அவர் வேண்டுகோள் வைத்தார். ஊடகம் மூலம் இதை அறிந்த இமான், தானாக முன்வந்து உதவிக்கரம் நீட்டினார்.
விபத்தில் கால் இழந்த பள்ளி மாணவன் ஒருவருக்கு செயற்கை கால் கொடுத்து மாணவனை மகிழ்ச்சியடைய செய்தார் இமான்.

மனதிற்குப் பிடித்த இசை வாழ்க்கை, புகழ் என அனைத்தும் இருந்தாலும், தனக்குள் கூடு போட்டு வாழாமல், வெளி உலகை அனுதினமும் தரிசித்து தேவை உள்ளோருக்கு தன்னாலான உதவிகளை விளம்பரம் இன்றி செய்து வரும் இமான் அவர்களுக்கு இன்று பிறந்தநாள்.

தமிழன் குரல் சார்பாக அவருக்கு வாழ்த்துகள்!
–             டி.வி.சோமு