‘ஹைக்கூ’: விரைவில் திரையில் விரியும் கவிதை!

‘ஹைக்கூ’: விரைவில் திரையில் விரியும் கவிதை!

நிதானமான வேகம், அழகான காட்சிகள் எனப் பயணித்த ‘ஹைக்கூ’ படத்தின் படப்பிடிப்பு தற்பொழுது சுபம் போட்டு முடிந்துள்ளது. நான்கு கட்டங்களாக, பல இடங்களில் கோலாகலமாக நடந்த இந்த ஷூட்டிங், ஈசிஆர் கடற்கரையோடு ஒரு நிறைவான கட்டத்திற்கு வந்துள்ளது.

இயக்குநர் யுவராஜ் சின்னசாமியின் கனவுத் திட்டத்திற்குத் தயாரிப்பாளர்கள் டாக்டர் டி. அருளானந்து மற்றும் மேத்யூ அருளானந்து கொடுத்த முழு சுதந்திரம், படக்குழுவை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது. கதை மேல் வைத்த நம்பிக்கையால், இன்னும் ரிலீஸ் ஆவதற்கு முன்பே நெட்ஃபிலிக்ஸ் நிறுவனம் டிஜிட்டல் உரிமையை அள்ளிக் கொண்டு போய்விட்டது. இது படக்குழுவின் நம்பிக்கையை இன்னும் எகிற வைத்துள்ளது.

ஏகன், ஸ்ரீதேவி, பெமினா ஜார்ஜ் எனப் பெரிய பட்டாளமே நடித்துள்ள இப்படத்திற்கு சித்து குமார் இசையமைக்க, பிரியேஷ் குருசாமி கேமராவை கையாண்டுள்ளார். சீக்கிரம் தியேட்டரில் தென்றலாய் வந்து ரசிகர்களை வருடிச் செல்லத் தயாராகி வருகிறது இந்த ‘ஹைக்கூ’!

Related Posts