“ஆர்.எஸ்.எஸ். போல் ஆளுநர் செயல்படக்கூடாது!”: மா.கம்யூ கண்டிப்பு!

“ஆர்.எஸ்.எஸ். போல் ஆளுநர் செயல்படக்கூடாது!”: என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் முன்னாள் மாநில செயலர் ராமகிருஷ்ணன் தெரிவித்து உள்ளார்.
புதுக்கோட்டையில் அவர் அளித்த பேட்டி:
“அரசியல் உரிமை என்பது ஓட்டளிக்கும் உரிமை. அதை, பா.ஜ.,வுக்காக தேர்தல் ஆணையம் பறிக்கக்கூடிய நிலை ஏற்பட்டுள்ளது.
மத ரீதியில் மக்களை பிளவுபடுத்தும் பாணியில் பிரதமர் மோடி சுதந்திர தின உரையாற்றியுள்ளார். அவர் ஆர்.எஸ்.எஸ்., தலைவராக பேசியுள்ளார்.
அமெரிக்காவின் 50 சதவீ த வரி விதிப்பு, இந்திய பொருளாதாரத்தை பாதிக்கக்கூடியது. இதை பாதுகாப்பதற்கு, நடவடிக்கை எடுப்பது பற்றி சுதந்திர தின உரையில் இல்லை. ஆர்.எஸ்.எஸ்., மாநில தலைவரை போல், தமிழக கவர்னர் பேசி வருகிறார். எதிர்க்கட்சியினரைப் போல் கவர்னர் செயல்படக்கூடாது” இவ்வாறு ராமகிருஷ்ணன் தெரிவித்தார்.