நவ., 20ல் உலகெங்கும் பறக்கப்போகுது ‘FLAG’!

நவ., 20ல் உலகெங்கும் பறக்கப்போகுது ‘FLAG’!

இந்தியாவின் மூவர்ணக் கொடியை மையமாகக் கொண்டு, உலக நாடுகளின் தேசியக் கொடிகளையும் போற்றும் விதமாக ஒரு மெகா சினிமா பயணம் ஆரம்பமாகிறது!

ஐ&ஐ மூவிஸ் தயாரிப்பில், வை. வைரப்பிரகாஷ் தயாரிப்பில் உருவாகியுள்ள ‘ஃப்ளாக்’ (FLAG) திரைப்படம் வரும் நவம்பர் 20-ஆம் தேதி திரையரங்குகளில் பிரம்மாண்டமாக களமிறங்குகிறது!

இப்படத்திற்கு கதை, திரைக்கதை, வசனம் எழுதி, ஒளிப்பதிவு செய்து, மிகச்சிறப்பாக இயக்கியுள்ளார் எஸ்.பி. பொன் சங்கர். இவருடன் எடிட்டிங் பணிகளை வரதராஜனும், இசையை ராஜா ரவிவர்மா மற்றும் பாலசுப்ரமணியம் கூட்டணியும் கவனித்துள்ளனர்.

திரைப்படத்தின் நட்சத்திர பட்டாளமும் செம மாஸாக அமைந்துள்ளது! ‘இட்லி கடை’ மற்றும் ‘டோரதி’ புகழ் ‘குட்டி தனுஷ்’ தீஹான், பாலிவுட்டின் முன்னணி படங்களில் கலக்கிய மிக்கி மக்கி ஜா & அபினவ் கோசாமி ஆகியோர் முதன்மை பாத்திரங்களில் பட்டையைக் கிளப்பியுள்ளனர். இவர்களுடன் போஜ்புரி நடிகர் அனந்த், பெங்காளி நடிகர் பப்புஷா மற்றும் கேரளா, கர்நாடகாவைச் சேர்ந்த திறமையான நடிகர்களும் இணைந்துள்ளனர்.தயாரிப்பாளர் வை. வைரப்பிரகாஷ் உற்சாகத்துடன் கூறுகையில்:

“இது வெறும் திரைப்படமல்ல, எங்களுடைய கனவு! இந்தியாவின் மூவர்ணக் கொடியை மையமாகக் கொண்டு உருவாகும் ‘FLAG’, உலக நாடுகளும் தங்கள் தேசியக் கொடிகளைப் போற்றும் வகையில் சர்வதேச சினிமா முன்னெடுப்பிற்கான விதையாக அமையும். இது ஒரு படத்தின் வெற்றி மட்டுமல்ல, ஒவ்வொரு நாட்டின் தேசியக் கொடியையும் சினிமா வழியாக உலகிற்கு அறிமுகப்படுத்தும் உலகளாவிய இயக்கத்தின் தொடக்கம்!”

தேசப் பற்றையும், சர்வதேச சினிமா தரத்தையும் ஒரே கூரையின் கீழ் கொண்டுவரும் ‘ஃப்ளாக்’ திரைப்படத்தை நவம்பர் 20 முதல் திரையரங்குகளில் மிஸ் பண்ணாம பாருங்க!

Related Posts