புத்தாண்டின் மகிழ்ச்சி துவக்கம்!: சைதையாரின் மனித நேய மைய மாணவர் சாதனை!

வருங்கால வைப்பு நிதி அதிகாரி பதவிக்கான தேர்வில் மனித நேய மையத்தில் படித்த திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்த கோகுல் காளீஸ்வரன் மாநில அளவில் முதலிடம் பிடித்தார்.
அவருக்கு சைதை துரைசாமி வாழ்த்து தெரிவித்தார்.மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் ( யு.பி.எஸ்.சி.) ஆண்டுதோறும் பல்வேறு பணியகளுக்கான தேர்வை நடத்தி வருகிறது. அந்த வகையில் வருங்கால வைப்ப்பு நிதி அதிகாரி பணியில் 418 காலிப்பணி இயிடங்களை நிறப்புவதற்கான அறிவிப்பு 21.02.2023 அன்று வெளியிடப்பட்டது. அதன் படி இந்த பணிக்கான எழுத்துத்தேர்வு கடந்த 2.07.2023 அன்று நடைபெற்றது.
இந்த தேர்வு முடிவுகள் 21.07.2023 அன்று வெளியிடப்பட்டது. இந்த பணிக்கான எழுத்து தேர்வில் வெற்றிப்பெற்றவர்கள் நேர்முகத் தேர்வை எதிர்கொள்வது குறித்து, பெருநகர சென்னை முன்னாள் மேயர் சைதை துரைசாமி தலைமையிலான மனித நேய ஐ.ஏ.எஸ் கட்டணமில்ல பயிற்சிமையத்தில் சிறந்த பயிற்சியாளர்கள் மூலம் இலவச பயிற்சி அளிக்கப்பட்டது.
வருங்கால வைப்பு நிதி அதிகாரி பணிக்கான நேர்முகத் தேர்வு 4.11.2023 முதல் 6.12.2024 வரை நடைபெற்றது. நேர்முகத்தேர்வு முடிவு கடந்த 2ஆம் தேதி வெளியானது. இதில் மனித நேய மையத்தில் பயிற்சி பெற்ற திருப்பூர் மாவட்டம் தாரபுரம் அருகே உள்ள சென்னாகல் பாளையத்தை சேர்ந்த பி.கோகுல் காளீஸ்வரன் என்ற மாணவர் அகில இந்திய அளவில் 35-வது இடத்தையும் மாநில அளவில் முதலிடத்தையும் பிடித்து சாதித்தார்.
வெற்றி பெற்ற மாணவர் கோகுல் காளீஸ்வரனுக்கு மனித நேய பயிற்சி மையத்தின் தலைவர் சைதை துரைசாமி புத்தகத்தை பரிசாக வழங்கி வாழ்த்து தெரிவித்தார். மனித நேய மையத்தில் பயிற்சி பெற்ற 40 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் மத்திய, மாநில அரசு உயர் பதவிகளில் இருப்பது குறிப்பிடத்தக்கது.