‘ஏத்து..’: இரு புயல்களின் அதிரடி! 100 மில்லியன் பார்வைகள்! .
இசைப்புயலும் நடனப்புயலும் இணைந்தால் சும்மாவா? ‘Moonwalk’ படத்தின் ‘Yethu’ பாடல் இப்போது வெறும் பாட்டல்ல, உலகத்தையே ஆட வைக்கும் ஒரு குளோபல் மேஜிக்! இன்ஸ்டாகிராமை புரட்டிப் போட்டுக்கொண்டிருக்கும் இந்தப் பாடல், வெறும் இரண்டே வாரங்களில் யூடியூபில் 11 மில்லியன் பார்வைகளைக் கடந்து மாஸ் காட்டி வருகிறது.
ஜப்பான் முதல் ஆப்பிரிக்கா வரை, பிரான்ஸ் முதல் அமெரிக்கா வரை என எல்லைகளைக் கடந்து எல்லோரையும் எனர்ஜியாக ஆட வைத்துக் கொண்டிருக்கிறது இந்த ‘Yethu’ ட்ரெண்ட். சமூக வலைதளங்களில் இந்தப் பாடலுக்கான ரீல்ஸ்கள் மட்டும் 100 மில்லியன் பார்வைகளைத் தாண்டி காட்டுத்தீயாய் பரவி வருகிறது.
இதில் ஹைலைட்டே ஆப்பிரிக்காவின் புகழ்பெற்ற “Hypers Kids Africa” குழுவினர் ஆடிய நடனம்தான்! அதைப் பார்த்து மெய்சிலிர்த்த ஏ.ஆர்.ரஹ்மான், “உங்கள் அன்புக்கும் திறமைக்கும் நன்றி, நீங்கள் அசத்திவிட்டீர்கள்!” என நேரடியாகக் கமெண்ட் செய்ய, அந்தப் பிள்ளைகளும் நெகிழ்ந்து பதிலளித்துள்ளனர்.
பிரபுதேவாவின் அசாத்தியமான அசைவுகளும், ரஹ்மானின் அதிரடி இசையும் சேர்ந்து இந்தப் பாடலை ஒரு உலகளாவிய நடனத் திருவிழாவாகவே மாற்றிவிட்டது. ஜனவரி 27-ல் தொடங்கிய இந்த ஆட்டம், நாளுக்கு நாள் வேகம் குறையாமல் இன்னும் சூடுபிடித்துக் கொண்டே இருக்கிறது!

