இந்தியன் 1ல் இருந்து இந்தியன் 2 எப்படி வேறுபட்டது? ஷங்கர் விளக்கம்
ஷங்கர் இயக்கத்தில் கமல் நாயகனாக நடிக்கும் இந்தியன் 2 திரைப்படம் ஜூலை 12ம் தேதி வெளியாகிறது. இந்நிலையில், படத்தின் டீசர் வெளியீடும், செய்தியாளர் சந்திப்பும் சென்னையில் இன்று நடைபெற்றது.
நிகழ்வில் ஷங்கர், “தற்போதைய சூழலில் இப்படி நடந்தால் எப்படி இருக்கும் என்கிற அடிப்படையில் என் படங்கள் இருக்கும். அதேபோலத்தான், இப்போது இந்தியன் தாத்தா வந்தால் எப்படி இருக்கும் என்பதுதான் இந்தப் படத்தின் கதை.
முதல் பாகம் தமிழகத்துக்குள் நடப்பது போல இருக்கும். இரண்டாம் பாகத்தில் இந்தியன் தாத்தா மற்ற மாநிலங்களுக்கும் போகிறார்.
முதல் பாகத்தில் 40 நாட்கள்தான், கமல் சாருக்கு பிராஸ்தெடிக் மேக்கப் போட்டோம். ஆனால், இரண்டாம் பாகத்துக்கு 70 நாள் பிராஸ்தெடிக் மேக்கப் போட்டோம்.
ஷூட்டிங் ஆரம்பிக்கிறதுக்கு முன்பே வந்து.. ஷூட்டிங் முடிந்து எல்லா நடிகரும் போன பிறகுதான் கமல் சார் போவார். அந்த அளவுக்கு அவருக்கு மேக்கப் போடுவதற்கு நீண்ட நேரம் ஆகும். அதை எடுப்பதற்கும் ஒரு மணி நேரம் ஆகும்.
ஒரு காட்சிக்காக, நான்கு நாட்கள், கயிரில் தொங்கி கமல் நடித்தார். அந்தச் சமயத்தில், அவர் இந்தியன் தாத்தா மேக்கப் போட்டிருப்பார்.. பஞ்சாபி மொழியையும் பேசி நடித்திருப்பார்.
. சேலஞ்சிங்காக எது கொடுத்தாலும் செய்துவிடுவார் கமல் சார்.
நான் எதிர்பார்த்தைவிட அனிருத் சிறப்பாக மியூசிக் கொடுத்திருக்கிறார்” என்று பேசினார்.

