நட்சத்திரத் தம்பதி திலீப் – காவ்யா மாதவனின் ‘தி புட்டு’: சென்னையில் களைகட்டியது கேரள ஸ்பெஷல்!

 நட்சத்திரத் தம்பதி திலீப் – காவ்யா மாதவனின் ‘தி புட்டு’: சென்னையில் களைகட்டியது கேரள ஸ்பெஷல்!

சாப்பாட்டுப் பிரியர்களுக்கு ஒரு செம ஹாட் நியூஸ்! உலகமெங்கும் இருக்கும் உணவகம் செல்லும் கலாச்சாரத்தைக் கொண்டாடும் விதமாக, கேரளாவின் பாரம்பரியச் சுவையை அச்சுஅசலாக வழங்கிவரும் மலையாள முன்னணி நடிகர் திலீப் – காவ்யா மாதவன் தம்பதியின் ‘தி புட்டு – Dhe Puttu’ உணவகம், இப்போது நம்ம சென்னை அண்ணா நகரில் கோலாகலமாகக் கால்பதித்துள்ளது!

இன்று நடைபெற்ற இதன் பிரம்மாண்ட திறப்பு விழாவில், பிரபல தயாரிப்பாளர் கோகுலம் கோபாலன் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு உணவகத்தைத் திறந்து வைத்தார்.இந்த விழாவில் திரையுலகமே திரண்டு வந்து வாழ்த்தியது! நடிகர்கள் அசோகன், ஷாந்தனு பாக்யராஜ், அர்ஜுன் அசோகன், ரியாஸ் கான்; நடிகைகள் மீனா, சாரதா, ஷீலா, சீமா, ராதிகா சரத்குமார், மிர்னா, பூர்ணிமா பாக்யராஜ், கிகி விஜய்; சட்டமன்ற உறுப்பினர் லீமா ரோஸ் மார்டின், இயக்குநர் பிரியதர்ஷன்; தயாரிப்பாளர்கள் கண்ணன் ரவி, சிவா, விஜயகுமார், ரவி கொட்டாரக்கரா, Seven Arts விஜயகுமார், Prince Pictures வெங்கடேஷ், ஏ.வி. அனூப், மினி ஸ்டூடியோ வினோத் குமார்; பாடகர்கள் ராகேஷ் பிரம்மானந்தன், சுஜாதா மோகன்; நடன இயக்குநர்கள் கலா மாஸ்டர், சாண்டி மாஸ்டர்; ஸ்டண்ட் மாஸ்டர்கள் கனல் கண்ணன், மாஃபியா சசி; ஒளிப்பதிவாளர் அபினந்தன் ராமானுஜன், டாக்டர் சைதன்யா, டாக்டர் கே. கிரீஷ் எனப் பல விஐபிக்கள் படையெடுத்து வந்து விழாவை அதகளப்படுத்தினர்!

என்னப்பா ஸ்பெஷல்? ஒன்றா, இரண்டா…  80 வகையான புட்டு ரகங்கள் இங்கு கிடைக்கின்றன! அதுமட்டுமா, கேரளாக்கே நேரில் சென்று சாப்பிடுவது போன்ற பாரம்பரியச் சுவையும், அచ్చசல் கேரள கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் அட்டகாசமான இன்டீரியர் டிசைனும் இங்கு வருபவர்களை மெய்சிலிர்க்க வைக்கிறது.ஏற்கனவே துபாய், சார்ஜா, ஜெட்டா, தோஹா என வளைகுடா நாடுகளில் கொடிகட்டி பறக்கும் ‘தி புட்டு’, சென்னை மலையாளிகளுக்கும், கேரளா உணவுகளைக் காதலிக்கும் சென்னைவாசிகளுக்கும் ஒரு சுவையான விருந்தாக அமைந்துள்ளது. 80 வகை புட்டுகளின் சுவையை அனுபவிக்க சென்னை சாப்பாட்டு பிரியர்கள் இப்பவே அண்ணா நகரை நோக்கி படையெடுக்க ஆரம்பிச்சுட்டாங்க!

Related Posts