‘துரந்தர்’ சாதனை: நான்கே நாள்.. 31 கோடி + பார்வைகள்!

‘துரந்தர்’ சாதனை: நான்கே நாள்.. 31 கோடி  + பார்வைகள்!

ஜியோ ஸ்டுடியோஸ் மற்றும் B62 ஸ்டுடியோஸ் கூட்டணியில் உருவாகியுள்ள ‘துரந்தர் பழிவாங்கல்’ திரைப்படத்தின் ட்ரைலர், வெளியான வெறும் 48 மணி நேரத்தில் டிஜிட்டல் தளங்களை மொத்தமாகத் தன்வசப்படுத்தி 312 மில்லியன் பார்வைகளைக் கடந்து இமாலய சாதனை படைத்துள்ளது.

கடந்த மார்ச் 7-ம் தேதி வெளியான இந்த ட்ரைலர், ஒரு புயலைப் போல சமூக வலைதளங்களைச் சுழற்றி அடிப்பதுடன், 45-க்கும் மேற்பட்ட நாடுகளில் யூடியூப் ட்ரெண்டிங்கில் முதலிடம் பிடித்து இந்திய சினிமாவின் சர்வதேச தரத்தை மீண்டும் பறைசாற்றியுள்ளது.

இயக்குநர் ஆதித்யா தர் கைவண்ணத்தில் ஒரு ஹை-வோல்டேஜ் ஸ்பை த்ரில்லராக உருவாகியுள்ள இந்தப் படத்தில், பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங் ‘ஜஸ்கிரத் சிங் ரங்கி’ மற்றும் ‘ஹம்சா அலி மசாரி’ என இரண்டு மாறுபட்ட வெறித்தனமான கதாபாத்திரங்களில் தோன்றி ரசிகர்களின் எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ளார். இவருடன் இணைந்து வியூகங்கள் வகுக்கும் அஜய் சன்யாலாக ஆர். மாதவனும், அச்சுறுத்தும் ஐஎஸ்ஐ மேஜர் இக்பாலாக அர்ஜுன் ராம்பாலும், ஆதிக்கம் செலுத்தும் எஸ்பி சௌத்ரி அஸ்லாமாக சஞ்சய் தத்தும் என ஒரு மாபெரும் நட்சத்திர பட்டாளமே களம் கண்டுள்ளது.

இந்த ட்ரைலரின் மிரட்டலான பின்னணி இசையும், தெறிக்கவிடும் வசனங்களும் இன்ஸ்டாகிராம் மற்றும் கூகுள் ட்ரெண்ட்ஸை ஆக்கிரமித்து வரும் நிலையில், வரும் 2026 மார்ச் 19-ம் தேதி குடி பத்வா மற்றும் ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு தமிழ் உட்பட 5 மொழிகளில் திரையரங்குகளைத் துவம்சம் செய்ய வருகிறது இந்த ‘துரந்தர்’ பழிவாங்கல்.

Related Posts