‘கூலி’ ரஜினி பெயரில் மோசடி! ரசிகர்களுக்கு எச்சரிக்கை!

‘கூலி’ ரஜினி பெயரில் மோசடி! ரசிகர்களுக்கு எச்சரிக்கை!

பிரம்மாண்ட மற்றும் பெரிய ஹீரோக்கள் நடிக்கும் தமிழ்த் திரைப்படங்களை, மலேசியாவில் விநியோக உரிமை பெற்று திரையிடுவது டத்தோ அப்துல் மாலிக் என்பவரின் மாலிக் ஸ்ட்ரீம்ஸ் கார்ப்பரேஷன் நிறுவனம். 

சமீபத்தில் வெளியான சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்த, கூலி படத்தின் மலேசிய திரையரங்க விநியோக உரிமைகளைப் பெற்று, வெளியிட்டது.

இந்நிலையில், “கூலி படத்தைப் பார்த்து கேள்விகளுக்கு பதில் சொன்னாள் ரஜினிகாந்தை சந்திக்கலாம்” என்று ஒரு தகவலை வெளியிட்டுள்ளது.

ஆனால் “இந்த தகவல் பொய்யானது” என மூத்த மக்கள் தொடர்பாளர் ரியாஸ் கே அகமத் தெரிவித்துள்ளார் . மேலும், “ரஜினியிடம் எந்த ஒரு அனுமதியும் கேட்காமல் இந்த நிகழ்ச்சி ஒருங்கிணைக்கப் பட்டிருக்கிறது. ரசிகர்கள் இதைப் பார்த்து ஏமாந்துவிட வேண்டாம்” என்றும்  அவர் கூறியுள்ளார்.

Related Posts