வெளியானது சியான் 63 பட அறிவிப்பு!
நடிகர் விக்ரம் பல ஆண்டுகளை கடந்து சினிமாவில் ஹீரோவாக மாஸ் காட்டி வருகிறார். அந்த வகையில் அவரது கேரியர் பெஸ்டாக பல படங்கள் அமைந்து வருகின்றன. கடந்த ஆகஸ்ட் மாதத்தில் பா ரஞ்சித் இயக்கத்தில் தங்கலான் படத்தில் நடித்திருந்தார் விக்ரம். இந்த படம் ரிலீசாகி கலவையான விமர்சனங்களை பெற்ற போதிலும் 100 கோடி ரூபாய் கிளப்பில் இணைந்துள்ளது.
இந்நிலையில் அடுத்ததாக சித்தா பட இயக்குநர் அருண்குமாருடன் இணைந்து வீர தீர சூரன் படத்தில் நடித்துள்ளார். இந்தப் படத்தின் சூட்டிங் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில் அடுத்ததாக சியான் 63 படம் குறித்த அறிவிப்பு இன்றைய தினம் வெளியாகி உள்ளது. விரைவில் இந்தப் படத்தின் சூட்டிங் துவங்கவுள்ளது.
சாந்தி டாக்கீஸ் தயாரிப்பில் மண்டேலா, மாவீரன் ஆகிய வெற்றிப் படங்களை கொடுத்துள்ள இயக்குநர் மடோன் அஸ்வின் இயக்கத்தில் தன்னுடைய சியான் 63 படத்தில் விக்ரம் இணையவுள்ளார். இதுகுறித்து சாந்தி டாக்கீஸ் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

