சென்னை சிட்டி கேங்ஸ்டர்ஸ்: விமர்சனம்
“உங்களை எல்லாம் வச்சுக்கிட்டு ஒரு (செல்போன்) பவர் பேங்கைகூட திருட முடியாது” என்று சொல்லும்படியான காமெடி ரவுடிக் கூட்டம், ஒரு வங்கியை கொள்ளையடிக்க முனைந்தால் என்ன நடக்கும் என்பதை நகைச்சுவையாகச் சொல்கிறது, சென்னை சிட்டி கேங்ஸ்டர்ஸ்.
பெரிய தாதா, ஹூசைனி, தன் வீட்டில் கொள்ளை நடந்ததாக நாடகமாடி இன்சூரனஸ் பணம் வாங்க திட்டமிடுகிறார். அதற்காக தனது சிஸ்யனான குட்டி தாதா லிவிங்ஸ்டனை நாடுகிறார். அவர், தனது சிஸ்யரான வைபவிடம் சொல்கிறார். அது சிக்கலில் முடிகிறது. ஆகவே வங்கியில் கொள்ளையடிக்க திட்டமிடுகிறார்கள். அது என்ன ஆகிறது என்பது கதை. இதற்கிடையே, குட்டிதாதாவின் மகள் அதுல்யாவுக்கும், வைபவுக்கும் காதல்.. அது என்ன என்பதும் கிளைக்கதை.
வைபவ் வழக்கம்போல அலட்டிக்கொள்ளாமல் ஜாலியாக நடித்து இருக்கிறார். அட… அவர் மட்டுமாதானா… நாயகி அதுல்யா, ஆனந்தராஜ், இளவரசு, ஜான்விஜய், ஹூசைனி அனைவருமே ஜாலியாக நடித்து இருக்கிறார்கள்.
டி.இமானின் இசையில் பாடல்கள் ஓகே ரகம். பின்னணி இசை சிறப்பு.
டிஜோ ஜோமியின் ஒளிப்பதிவு படத்துக்கு பலம்.
சுரேஷ் ஏ பிரசாத்தின் எடிட்டிங் கச்சிதம்.
அரைகுறை கொள்ளையர்கள், அவர்கள் நடத்தும் ராபரி… லாஜிக் பார்க்காமல் சிரித்துவிட்டு வரலாம்!
ரேட்டிங்: 2.9/5

