‘ரயி(லி)ல்’ வருகிறான் ‘வடக்கன்!’

‘ரயி(லி)ல்’ வருகிறான் ‘வடக்கன்!’

‘வடக்கன்’  திரைப்படத்தின் தலைப்பு, ‘ரயில்’ என மாற்றப்பட்டு உள்ளது.

எம்டன் மகன், நான் மகான் அல்ல, அழகர்சாமியின் குதிரை உள்ளிட்ட திரைப்படங்களுக்கும்,  மெட்டிஒலி  உள்ளிட்ட பல தொலைக்காட்சித் தொடர்களுக்கும் வசனம் எழுதியவர் பாஸ்கர் சக்தி. இவர் தற்போது வடக்கன் என்ற திரைப்படத்தை இயக்கியுள்ளார்.வடமாநிலத்தில் இருந்து தமிழ்நாட்டுக்கு  வந்து வேலை பார்க்கும் இளைஞர்களின் வாழ்க்கையை காட்சிப்படுத்தி உள்ளார்.

“வடமாநிலத்தவர்கள் இங்கு வந்து வேலை செய்வதில் இருக்கும் பாசிட்டிவ் மற்றும் நெகட்டிவ் ஆகிய இரு விஷயங்களையும் சொல்லி இருக்கிறேன்” என பாஸ்கர் சக்தி  தெரிவித்தார்.

இந்த திரைப்படத்தை பார்த்த தணிக்கை குழுவினர் தலைப்பை மாற்ற வேண்டும் என கூறியுள்ளனர் இதனால் வரும் 24ஆம் தேதி வெளியாக வேண்டிய படம் தள்ளிச் சென்றுள்ளது.

“இந்தப் படத்தை பார்த்து தணிக்கை குழுவினர் தங்களை பாராட்டி சான்றிதழ் வழங்குவார்கள் என நினைத்தோம். ஆனால் தலைப்பை மாற்ற சொல்லி கூறினர்.  அதுமட்டுமில்லாமல் பெயரை மாற்ற சொன்ன விதம் கோரிக்கையுடன் கூடிய கட்டளையாக இருந்தது” என பாஸ்கர் சக்தி ஆதங்கப்பட்டார்.

இந்நிலையில் படத்தின் தலைப்பு ரயில் என மாற்றப்பட்டுள்ளதாகவும் விரைவில் வெளியீட்டு தேதி அறிவிக்கப்படும் என்றும் படக்குழு அறிவித்து உள்ளது.