அலறவைக்கும் ‘சக்ரவியூகம்’: அமேசான் ப்ரைமில்…!
மிரள வைக்கும், சஸ்பென்ஸ் த்ரில்லரான சக்ரவியூகம், அமேசான் ப்ரைமில் வெளியாகி உள்ளது.
சஹஸ்ரா கிரியேஷன்ஸ் தயாரிக்க, மைத்ரி மூவி மேக்கர்ஸ் வெளியிட்டுள்ள இப்படத்தில் அஜய் கதை நாயகநாக தோன்றுகிறார். மேலும், விவேக் திரிவேதி, ஊர்வசி பரதேசி, பிரக்யா நயன், உள்ளிட்டோர் முன்னணி பாத்திரத்தில் நடித்து உள்ளனர்.
சஞ்சய் ராவின் மனைவி ஸ்ரீ, தனது வீட்டில் கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் இறந்து கிடக்கிறார். விசாரணை அதிகாரி எஸ்ஐ சத்யா, தனது விசாரணையை துவங்குகிறார்.
முதலில் சஞ்சய் தான் குற்றவாளி என்று நினைக்கிறார்; அடுத்து விசாரணை வளையம், சஞ்சயின் நெருங்கிய நண்பரும், தொழில் பங்குதாரருமான ஷரத் மீது விழுகிறது. பிறகு ஸ்ரீயின் வீட்டில் பணிபுரியும் பணிப்பெண் மீது சந்தேகம் விழுகிறது.
இப்படி நொடிக்கு நொடி திகிலைக் கிளப்புகிறது திரைக்கதை. அடுத்தடுத்து எதிர்பார்க்கமுடியாத திருப்பங்கள், அதிரடி சண்டைக்காட்சிகளோடு படம் வேகமெடுக்கிறது.
இறுதியில் உண்மைக் குற்றவாளி யார் என தெரியும்போது அதிர்ச்சி ஏற்படுகிறது. யாரும் எதிர்பார்க்க முடியாத கிளைமாக்ஸ்!
படம் ஆரம்பித்த நேரத்திலிருந்து முடிவு வரை வேகமான திரைக்கதையால் நம்மை கட்டிப்போட்டுவிடுகிறார் இயக்குனர் சேத்குரி மதுசூதன்.
படத்திற்கு பாரத் மஞ்சிராஜுவின் இசையும், ஜி.வி.அஜய் குமாரின் ஒளிப்பதிவும் அதன் தன்மைக்கேற்ப பலம் கொடுக்கிறது. ஜெஸ்வின் பிரபு எடிட்டிங் விறுவிறுப்பாக உள்ளது.
க்ரைம் த்ரில்லராக மட்டுமில்லாது , நல்ல கருத்தை சொல்லும் விதமான படமாக உருவாகியுள்ளது.
“பேராசை அதிக துன்பத்தை தரும்” என்பதே இந்த படத்தின் மூலக்கரு.
அமேசான் பிரைமில் வெளியாகி நல்ல வரவேற்பையும் பெற்றுவருகிறது.
