“நான் ‘அந்த’ ஜாதி!”: நடிகை கஸ்தூரி ஓப்பன் டாக்!
பிராமண சமூகத்தின் மீது அவதூறு பிரசாரம் நடக்கிறது என்றும், பாதுகாப்பு இல்லை என்றும் கூறி, சென்னை எழும்பூரில் இந்து மக்கள் கட்சி ஆர்ப்பாட்டம் நடத்தியது.
இதில் பேசிய நடிகை கஸ்தூரி, “பிராமணர்கள் மீது இனப்படுகொலை நடக்கிறது. பிறப்பு முதல் இறப்பு வரையிலும் ஒவ்வொரு இடத்திலும் முக்கியமானதாக இருக்கும் ஒரு குலத்தை ஏன் ஒழிக்க வேண்டும் என்று நினைக்கிறார்கள்? அடுத்த தலைமுறையில் யார் செத்தாலும் கருமாதி பண்ணுறதுக்கு ஐயர்கள் இருப்பாங்களா என்கிற கவலை வந்திருக்கிறது எனக்கு.
பிராமணர்கள் வந்தேறிகளா? பிராமணர்கள் தமிழர்கள் இல்லை என்றால் வேறு யார் தமிழர்கள்?
வெள்ளையா இருக்குறவன் பொய் சொல்லமாட்டான் என்று சொன்னது வெள்ளைக்காரனை அல்ல. ஐயர், ஐயங்கார்களைத்தான் அப்படி சொன்னார்கள்” என்று பிராமணர்களுக்கு ஆதரவாக ஆவேசமாக பேசினார். அப்போது பிற இனத்தவர்களை இழிவாக பேசினார். இது சர்ச்சையை ஏற்படுத்தியது. பிறகு மன்னிப்பு கேட்டார். ஆனாலும் அவர் மீது காவல் நிலையங்களில் புகார் அளிக்கப்பட்டு உள்ளது.
இதையடுத்து கஸ்தூரி, பிராமணரோ என்கிற எண்ணம் பலருக்கும் வந்தது. இந்நிலையில், எழுத்தாளர் இரா.எட்வின், “பார்ப்பன சமூகத்தினர் இவரை பார்பனப்பெண் என்று ஏற்பதில்லை என்று தோன்றுகிறது. அதனால்தான் தன்னை பார்ப்பனர் என நிறுவ கஸ்தூரி தொடர்ந்து முயற்சி செய்கிறார்” என்று பதிவிட்டு உள்ளார்.
அதே நேரம் கடந்த (2023ம்) வருடம் தனது ட்விட்டர் பக்கத்தில் தன்னை நாடார் இன பெண் என கஸ்தூரி குறிப்பிட்டு உள்ளார்.
” பெரிய புள்ளி யாருக்காச்சும் மகன், பேரன், மருமகன் இப்படி எதுவுமே இல்லாமல் யாரும் தூக்கி விடாம யாரையும் தடுக்காமல் சொந்த முயற்சியிலே மேல வந்தவரு அஜித்.. ” என அப்போது ட்விட்டரில் ஒரு பதிவு வெளியிட்டார் கஸ்தூரி.
இந்த பதிவிற்கு கீழே ரசிகர் ஒருவர்,” அக்கா நீங்கள் நாடாரே கிடையாது. சங்கி எப்படி நாடாராக இருக்க முடியும். அனைவரையும் சமமாக பார்க்கும் நாங்கள் தான் ஒரிஜினல் நாடார் என்று பதிவு கொடுத்திருக்கிறார்.
அதற்கு நடிகை கஸ்தூரி,” ஜாதி பார்க்கும்போது உங்கள் சமத்துவம் தெரிகிறது. உழைப்பால் உயர்ந்த சமூகத்தில் நீங்களும் பிறந்ததற்கு பெருமைக் கொள்ளுங்கள். திராவிஷத்தை எதிர்த்த காமராஜர் வழி தோன்றல்கள் நாம். அதைவிட பெருமை உண்டா..?” என்று பதில் கொடுத்திருக்கிறார்.